செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

ஒலித்தது 'சங்கொலி' முழக்கம்!

ஒலித்தது 'சங்கொலி' முழக்கம்!

மறுமலர்ச்சி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வார இதழான 'சங்கொலி', 1996-ஆம் ஆண்டு வைகோ ஆசிரியராக தொடங்கப்பட்டு, திராவிட இயக்கக் கொள்கைகளை முன்னெடுத்து 30 ஆண்டுகளை நிறைவு செய்து 31-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன் தொடக்க விழாவும், இதழின் இலட்சியப் பயணமும், பல்வேறு அரசியல், இலக்கிய மற்றும் ஊடக ஆளுமைகளின் வாழ்த்துகளும் இக்கட்டுரையில் நினைவுகூரப்பட்டுள்ளன.

தொலைக்காட்சிகளின் ஆதிக்கம், விரல் நுனியில் வந்துவிட்ட இணைய உலகம். இவைகள் மலிந்துவிட்ட இந்த காலத்தில், அரசு விளம்பரங்கள் இல்லாமல், லாப நோக்கம் கருதி பரபரப்பான செய்திகளை வெளியிடாமல், ஜோதிடம், கிசு கிசு செய்திகள், விளையாட்டு இவைகளை புறந்தள்ளிவிட்டு, இயக்க ஏடுகளை நடத்துவது என்பது, உடல் முழுவதும் விளக்கெண்ணெயை தடவிக் கொண்டு வழுக்கு மரத்தில் ஏறுவதைப் போன்ற சவாலான செயலாகும்!

'சங்கொலி' ஏடு, அந்த சாதனையை 30 ஆண்டுகளாக நிகழ்த்தி, 31 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது!

நீதிக்கட்சியின் 'திராவிடன்', சுயமரியாதை இயக்கத்தின் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, திராவிடர் கழகத்தின் விடுதலை, உண்மை, தி.மு.கழகத்தின் திராவிட நாடு, நம் நாடு, காஞ்சி, மன்றம், இனமுழக்கம், முரசொலி ஆகிய திராவிடர் இயக்க இதழ்களின் நீட்சியாக, மறுமலர்ச்சி திமுக அதிகாரபூர்வ வார ஏடாக 'சங்கொலி' 1996 ஆம் ஆண்டில் தன் முழக்கத்தை கம்பீரமாக ஒலிக்கத் தொடங்கியது!

தலைவர் வைகோ அவர்களை ஆசிரியராகக் கொண்டு, மலர் 1, இதழ் 1, திருவள்ளுவர் ஆண்டு 2027, தை 19 (02.02.1996) அன்று சங்கொலியின் முழக்கம் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் விரைந்து புறப்பட்டது.

முதல் இதழில், தமிழ்க்குலத்தின் 'முத்திரைச் சங்கொலி' என்ற தலைப்பில், சங்கொலி இதழின் மாண்பினை விளக்கி, ஆசிரியர் வைகோ, கண்ணின் மணிகளுக்கு காவியம் தீட்டினார்!

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு! என்று பாவேந்தர் எழுப்பிய சிங்கநாதம், அண்ணாவின் பாசறைச் சங்கொலியாய் எழுகிறது"

என்ற வைர வரிகளுடன் ஆசிரியர் வைகோவின் சங்கொலி மடல் தொடங்குகிறது!

"குத்தீட்டிகளின் ஓசை! குதிரைகளின் குளம்படிச் சத்தம்! தேர்ச்சக்கரங்கள் புரளும் ஒலி! போர் யானைகளின் பிளிறல் எழும் சமர்க்களத்தில் பகையைச் சாய்க்க வீரர்கள் தட்டியெழுப்பும் ஒலிதான் 'சங்கொலி'! பகைவர்க்கு அறைகூவல் விடுக்கும் ஒலியே சங்கொலி! கிடைத்திட்ட வெற்றியை திசையெங்கும் பரப்பும் ஒலிதான் சங்கொலி" என்று ஆசிரியரின் சங்கொலி மடல் விரிகிறது!

"அண்ணாவின் தம்பியர் கரங்களில் தவழ்ந்திட, அதிகாரபூர்வ ஏடு தேவை என்ற ஏக்கம் பல நாட்களாய் கழகக் கண்மணிகள் அனைவரின் நெஞ்சத்திலும் வளர்ந்தது. என் எண்ணத்திலும் கிளர்ந்த நெடுநாள் வேட்கையின் விளைவாகவே, இனி வாரம் தோறும் சங்கொலி பரவிடும்" என்ற அறிவிப்பினை ஆசிரியர் வைகோ, தன் கண்ணின் மணிகளுக்கு அந்த மடல் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

நம் நினைவில் எந்நாளும் வாழும் தத்துவக் கவிஞர் அண்ணன் குடியரசு அவர்கள், 'சங்கொலியே போர் முழக்கம்' என்ற கவிதை பாடி, சங்கொலிக்கு வரவேற்பு கூறினார்.

ஆவேசத் தமிழீழக் காற்று வீசும்

அடிமை அல்ல நாமென்றே ஆர்ப்பரிக்கும்

நா வீசும் சொல்லெல்லாம் நெருப்பைக் கக்கும்

நடைமுறையில் சங்கொலி ஓர் போர் முழக்கம்!

பூவாசம் வீசுகின்ற இளவேனில் போல

புறப்பட்டு வருகின்ற அவ்வேட்டிற்குத்

தாய்ப்பாசம் காட்டுங்கள்! உங்கள் கையில்

சங்கொலியே தமிழ்க்குழந்தை! நீயோ அன்னை!

என்ற கவிஞர் குடியரசு அவர்களின் கவிதை சங்கொலிக்கு நேசக்கரம் நீட்ட தோழர்களுக்கு அழைப்பு விடுத்தது!

"மங்காத தமிழின மாண்புகள் சிறக்கவே சங்கொலி சங்கொலி சங்கொலி!

மாநிலத்தில் சுய ஆட்சி விளைக்கவே சங்கொலி சங்கொலி சங்கொலி!

இங்குள்ள தமிழர்கள் இன்னல்கள் தொலையவே சங்கொலி சங்கொலி சங்கொலி!

ஈழத்தமிழர்கள் வென்று முடிக்கவே சங்கொலி சங்கொலி சங்கொலி!"

என்று திராவிட இயக்கத்தின் இன்னிசைப் பாணர் கலைமாமணி அய்யா ந.மா.முத்துக்கூத்தன் அவர்கள் வாழ்த்துக் கவிதை, சங்கொலியின் முதல் இதழுக்கு அணி சேர்த்தது!

"மறுமலர்ச்சி திமுகவின் பிரகடனம்" என்ற தலைப்பிலான முதல் தலையங்கம், சங்கொலியின் கொள்கையை, குறிக்கோளை, இலட்சியப் பயணத்தை போர்ப் பிரகடனமாக முரசறைந்தது!

"மறுமலர்ச்சி திமு கழகத்தின் அதிகார பூர்வ வார ஏடான சங்கொலி முழங்கத் தொடங்கிவிட்டது. ஒளியின் விரைவால், வைகறையின் இருள் மெல்ல மெல்ல பிரிந்து, உலகமனைத்தும் விளக்கமுற்று, பளிச்சென தெரிவதைப்போல சங்கொலி பணியாற்ற களத்தில் இறங்கி விட்டது. திராவிட இயக்க வரலாற்றுச் சுழற்சியின் தொடர்ச்சிதான் மறுமலர்ச்சி திமுக! சங்கொலி வார ஏடு! சங்கொலி தோற்றத்தில் மட்டுமே புதிது அதன் அரசியல் சாயத்தால் பழமையும் இயக்கப் பாரம்பரியமும் கொண்டது. நீண்ட நெடிய வரலாற்றை உள்ளடக்கியது. சங்கொலி தனது முழக்கத்தை தமிழ் மக்களிடையே எழுப்ப முன்வந்துள்ளது. சங்கொலி மறுமலர்ச்சி திமுகவின் இலட்சோப லட்ச இளைஞர்களின் இதய ஒலியாக திகழ வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மண்ணை மணந்த மணாளர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வழி நின்று அவர்தம் கொள்கைகளை மனத்தில் நிறுத்தி செயலாற்றுவோம் என்கிற உறுதியை சங்கொலி அளிக்கிறது" என்று பிரகடனமாக சங்கொலி தலையங்கம் தீட்டியது.

மறுமலர்ச்சி திமு கழகம் மலர்ந்தது. கழகத்தின் வண்ணமணிக் கொடி உயர்ந்து, 31 மாதங்கள் கடந்த நிலையில் 'சங்கொலி' பிறந்தது!

'சங்கொலி' முதல் இதழின் அறிமுக விழா, சங்கொலி வெளியீட்டு விழாவாக 24.01.1996 அன்று சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. திருமதி விஜய தாயன்பன் தமிழிசைப் பாடல்களைப் பாட, எல்.கணேசன் தலைமையில் விழா தொடங்கியது. க.திருநாவுக்கரசு வரவேற்புரை ஆற்றினார்.

பிரண்ட் லைன் இதழ் ஆசிரியர் இந்து என்.இராம், சங்கொலி முதல் இதழை வெளியிட கலைப்புலி தாணு அதனை பெற்றுக் கொண்டார்.

முதல் இதழை வெளியிட்டு, இந்து ராம் அவர்கள் முத்திரைச் சங்கொலி வாழ்த்துரைத்தபோது, "நம் நாட்டில் மதங்களின் பெயரால் பகைத் தீ விசிறி விடப்படுகிறது. வகுப்பு வாத விஷப்பாம்பு ஆட்சிக் கட்டிலை குறி வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை அடித்து விரட்ட வேண்டும்! மக்களிடையே வகுப்பு நல்லிணக்கம், மதநல்லிணக்கம் மேலோங்க வேண்டும்! 'சங்கொலி' இதழில் இது இரண்டறக் கலந்து வரும் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டார். இன்றைக்கும் பொருத்தமானதாக இருப்பதை எண்ணி நாம் நெகிழ்ச்சி அடைகிறோம்!

"பொதுமக்கள் நலம் நாடிப்

பொதுக் கருத்தைச் சொல்க!

புன் கருத்தைச் சொல்லுவதில்

ஆயிரம் வந்தாலும்

அதற்கொப்ப வேண்டாமே"

என்ற புரட்சிக் கவிஞரின் பாடல், சங்கொலி வெளியீட்டு விழா அழைப்பிதழில் இடம்பெற்றிருந்ததை இந்து என்.ராம் பாராட்டி விட்டு,

"ஊரினை நாட்டை இந்த

உலகினை ஒன்று சேர்க்க

பேரறிவாளர் நெஞ்சிற்

பிறந்த பத்திரிகைப் பெண்ணே!"

என்ற பாவேந்தரின் பாடல் வரிகளையும் குறிப்பிட்டு, விசாலப் பார்வையால் மக்களை விழுங்கும் இதழாக சங்கொலி வாழ்க! வளர்க! என்றும் இந்து ராம் வாழ்த்துரைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யா, பத்திரிகையாளர் எஸ்.எஸ்.மாரிச்சாமி, சுதேச மித்ரன் ஆசிரியர் ஆர்.நாகராசன், நடிகர் சத்யராஜ், இயக்குனர்களான மணிவண்ணன், சுந்தர் ராசன், நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், கழக நிர்வாகிகளான மு.கண்ணப்பன், பொன்.முத்துராமலிங்கம், செஞ்சி இராமச்சந்திரன், தத்துவக் கவிஞர் குடியரசு, திருப்பூர் சு.துரைசாமி, மாவட்டச் செயலாளர்களான திருச்சி என்.செல்வராஜ், சென்னை ஏ.வி.கreditகிருஷ்ணமூர்த்தி, கே.எஸ்.இராதாகிருஷ்ணன், வாலாஜா அசேன் ஆகியோரின் வாழ்த்துரைக்குப் பின்னர், சங்கொலி இதழின் சிறப்பு ஆசிரியரும், கழக பொதுச்செயலாளருமான, தலைவர் வைகோ நிறைவுப் பேருரை ஆற்றினார். அ.சௌரிராசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

"தமிழிசை மன்றம் உதயமான இடத்தில், தமிழிசை மறுமலர்ச்சிக்கு முரசு கொட்டப்பட்ட இடத்தில், வெற்றிச்சங்கம் எழுப்பப்பட்ட இடத்தில் நமது வார ஏடு சங்கொலி வெளியிடப்பட்டிருக்கின்றது. அண்ணாமலைச் செட்டியாரும், ஆர்.கே.சண்முகம் செட்டியாரும் தமிழிசைக்கு மறுமலர்ச்சி காண பாடுபட்ட காலத்தில், தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணா அவர்களும் அவர்களுக்குத் துணையாக முழக்கமிட்டனர். இந்த இடத்திலே கழகத்தின் அதிகாரபூர்வ வார ஏடு வெளியிடப்படுவது சாலப் பொருத்தமாக இருக்கிறது" என்ற வைர வரிகளுடன், தலைவர் வைகோ அவர்கள் தன் சிறப்புரையை துவக்கினார்.

"வகுப்பு துவேசம் வளர்ந்து வருவதை தடுப்பதற்கு, மதவெறியை மாய்ப்பதற்கு, மனித நேயத்தையும், மனிதாபிமானத்தையும் பாதுகாப்பதற்கு மறுமலர்ச்சி திமு கழகத்தின் சங்கொலி முழக்கம் கேட்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சங்கரய்யாவும், வரதராசன் அவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். அந்த கொள்கையே எங்கள் நெஞ்சிலே நாங்கள் தாங்கி இருக்கக் கூடிய கொள்கை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் நிறை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையே அறிஞர் அண்ணா அவர்கள் எங்களுக்கு காட்டியிருக்கிற பாதை. அந்த உணர்வு தழைக்கப் பாடுபடுவோம்" என்று சங்கொலி பயணிக்கும் திசையை சுட்டிக்காட்டி, தன் வாழ்த்துரையைத் தொடர்ந்தார் ஆசிரியர் வைகோ!

"சங்கொலியினுடைய வெற்றி நாதம் கேட்க வேண்டும் என்று நாலா திசைகளிலும் காத்துக் கொண்டிருக்கின்ற லட்சோப லட்சம் கழகக் கண்மணிகளே, இது உங்கள் ஏடு! உங்கள் இயக்கத்தின் ஏடு! இதை வல்லமையுடன் நடத்திச் செல்வதற்கு, இந்த இரண்டு கரங்களல்ல, கோடிக் கரங்கள் இருக்கின்றன என்ற நம்பிக்கையோடு இந்த ஏட்டை நாங்கள் நடத்துகின்றோம். தமிழ் பெருமக்களே ஆதரவு தாரீர் என்று நாங்கள் கேட்கிறோம்" என்றும் இதழுக்கு ஆதரவு கேட்டு, உரை நிகழ்த்தினார் தலைவர் வைகோ!

"களத்திலே வெற்றியை குவிக்க, அந்த வெற்றியின் நிறை முழக்கமாக சங்கொலி திசையெட்டும் கேட்கட்டும்!" என்ற தன் விழைவினைக் குறிப்பிட்டு, தன் வாழ்த்துரையை நிறைவு செய்தார் தலைவர் வைகோ!

"'சங்கொலி' என்பதுதான் தூய தமிழ்ச் சொல்! தாரை, தப்பட்டை என்பதெல்லாம் கடன் வாங்கிய சொற்கள். 950 ஆண்டுகள் மூத்த திருவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வார், 'படை போல் புக்கு முழங்கும் பாஞ்ச ஜைன்யமும் வாழ்கவே' என்று வாழ்த்தினாரே, அந்த வாழ்த்துக்களை நான் வை.கோபால்சாமிக்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன் என்று விழாவில் உரையாற்றிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.எஸ்.மாரிசாமி அவர்கள் குறிப்பிட்டு, தலைவர் வைகோ அவர்களையும், குழுமியுள்ள வாலிபப் பட்டாளத்தையும் பார்க்கும்போது, என் மனம் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறது. என் வயதில் 10 குறைந்துவிட்டதாக உணர்கிறேன்" என்றும் மகிழ்ச்சியுடன் உரை ஆற்றினார்.

"'சங்கொலி' மிக சிறப்பாக முழங்க இருக்கிறது. இந்த மேடை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களும் காரல் மார்க்சின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களும் இருக்கின்ற மேடை! பெரியாரின் சின்னம் கருப்பு! அவருடைய சின்னத்திற்கு பாதுகாப்பாக இரண்டு பக்கம் சிவப்பு இருப்பதுதான் மதிமுகவின் புதிய கொடி! இதனால் நிச்சயமாக இந்த நாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டே தீரும்!" என்று சங்கொலியை வாழ்த்தி முழக்கமிட்டார் இனமுரசு நடிகர் சத்யராஜ்!

"பொதுவாழ்க்கைக்கு நேர்மையான அரசியல் தேவைப்படுகிறது. நல்ல மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். அப்படி ஒருவரை தேடிப்பார்த்தால் என் கண்களுக்கு வைகோவைத் தவிர வேறு யாருமே தெரியவில்லை. நேர்மையை கற்றுத் தருவதற்கு என்று நமக்கு ஒரு பத்திரிகை தேவைப்படுகிறது! அதுதான் சங்கொலி! இளைஞர்களை அநீதிக்கு எதிராக திரட்டுவதற்கு போர்ப்பரணி பாடும் ஏடுதான் சங்கொலி!" என்று அந்த விழாவில் வாழ்த்துரை வழங்கினார் இயக்குனர் மணிவண்ணன்!

"பத்திரிகைகள் நடத்துவது என்பது சாதாரணமான விசயமல்ல. ஒரு அரசியல் கட்சியை விட அதிக பொறுப்பாகத்தான் இப்போது பத்திரிகைகளை நடத்த வேண்டும். இன்று வந்து கொண்டிருக்கின்ற பத்திரிகைகள் எல்லாம் பத்திரிகைகள் அல்ல! பத்திரிகைகள் என்றால் அவைகளுக்கு கொள்கை, கோட்பாடு, இலட்சியம் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இலட்சியப் பத்திரிகை வேண்டுமென்கிறபோதுதான் வைகோ சங்கொலியை ஆரம்பித்து இருக்கின்றார். நாடாளுமன்றத்தில் வைகோ பெற்ற பயிற்சி சாட்சியமாகவும், நாணயமாகவும், நல்ல தொண்டனாகவும் அரசியலிலே அவர் வளர்ந்த வளர்ச்சி அத்தனையும் இப்போது நமக்கு பயன்படுகிறது" என்று சங்கொலி விழாவில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வரதராசன் வாழ்த்துரை வழங்கினார்.

இத்தகைய சங்கொலியின் வெளியீட்டு விழா நிகழ்வுகள் 30 ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும் தெவிட்டாத தேனாய் நம் நெஞ்சில் இனிக்கின்றன!