வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

ஓமன் நாட்டில் உயிரிழந்த நிஷாந்த் குடும்பத்தினருக்கு துரை வைகோ எம்.பி. ஆறுதல்

ஓமன் நாட்டில் உயிரிழந்த நிஷாந்த் குடும்பத்தினருக்கு துரை வைகோ எம்.பி. ஆறுதல்

ஓமன் நாட்டின் துக்கம் துறைமுகத்தில் பணியில் இருந்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாந்த் உடலை தாயகம் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என துரை வைகோ எம்.பி. உறுதியளித்தார்.

12.06.2026 அன்று, ஓமன் நாட்டின் துக்கம் (Duqm) துறைமுகத்தில் Glory International நிறுவனக் கப்பலில் பணியில் இருந்தபோது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தகவல் கிடைத்ததும், நிஷாந்த் அவர்களின் உடலை தங்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் மூலம் ஹிஷாந்த் அவர்களின் மனைவி திருமதி சரோபின் அவர்கள் துரை வைகோ எம்.பி. அவர்களை அணுகினார்.

தகவல் அறிந்த உடன், 15.06.2026 அன்று மாண்புமிகு இந்திய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்குக் கடிதம் எழுதி, மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் தொடர்பு கொண்டு, ஓமன் நாட்டில் கப்பல் பணியில் உயிரிழந்த திரு. நிஷாந்த் அவர்களுடைய உடலை கண்ணியத்துடன் தாயகம் கொண்டுவர அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உதவுமாறு துரை வைகோ எம்.பி. கேட்டுக்கொண்டார்.

மீண்டும் 21.06.2026 அன்று வெளியுறவுத்துறை அதிகாரிகளை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, தாமதத்திற்கான காரணங்களை சரி செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, அவரது உடல் ஓமனிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, திருவனந்தபுரம் வந்தடைந்து, அங்கிருந்து அவர்களது இல்லம் சென்றடைந்தது.

இந்த துயரச் செய்தியை தன்னிடம் எடுத்து வந்து, உயிரிழந்த நிஷாந்த் அவர்களின் குடும்பத்தினருக்கு உறுதுணையாக நின்ற கழக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுக்கும், பிற இயக்கத் தோழர்களுக்கும் தனது நன்றியை துரை வைகோ எம்.பி. உரித்தாக்குவதாக தெரிவித்துள்ளார்.

ஓமன் நாட்டில் உயிரிழந்த நிஷாந்த் குடும்பத்தினருக்கு துரை வைகோ எம்.பி. ஆறுதல் | சங்கொலி