வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டம் 02.07.2026 அன்று தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. மாநில வெளியீட்டு அணிச் செயலாளர் நக்கீரன் தொகுத்து வழங்கினார்.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கனகராஜ், மக்கள் கண்காணிப்பகம் வழக்கறிஞர் ஹென்றி திபேன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பேராசிரியை பாத்திமாபாபு உள்ளிட்ட பலர் உரையாற்றினர். தமிழக விவசாயிகள் சங்கம் ஓ.ஏ.நாராயணசாமி, கழக விவசாய அணிச் செயலாளர் வாரணவாசி கி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்புரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், "30 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நச்சாலைக்கு எதிராகப் போராடி வருகிறேன். இந்த மண்ணின் மக்களைக் காப்பதற்காக நடத்திய போராட்டங்களில் உண்ணாநிலை அறப்போராட்டம், முற்றுகை மறியல், ஊர் ஊராகச் சென்று நடத்திய இயல் போராட்டம் என அனைத்திலும் பங்கேற்றேன்" என்றார்.

"தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் காவு வாங்கப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் இருக்கிற வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டும்போது, ஹென்றி திபேன் அவர்களின் அறிக்கையை என் கையில் வைத்துக்கொண்டு, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட எஜமானன் யார் என்ற கேள்விக்கு விடை கேட்பேன். கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்; பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட 101 பேர் மீதான வழக்குகள் உடனே திரும்பப் பெறப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

"ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, தோல்நோய் உள்ளிட்ட நோய்களால் மக்கள் இன்றும் அவதிப்படுகிறார்கள். காற்று வழியாக நச்சுக் காற்று பரவும்போது தூத்துக்குடி மக்களுக்கு சுவாச நோய்கள், புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஆலை இங்கே இருக்கக் கூடாது" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், "ஸ்டெர்லைட் நச்சு ஆலை மாற்றப்பட்ட பெயரில் மீண்டும் திறக்கப்படும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இந்த மண்ணை விட்டு மறைந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரத்தின் கர்ஜனை கேட்ட முத்து நகரில் இந்த மண்ணை காக்கவும், இங்கே வீசுகின்ற காற்றை நச்சுப் புகையிலிருந்து விடுவிக்கவும், மக்களின் உடல் நலனுக்கு ஏற்படும் கேடுகளைத் தவிர்க்கவும் ஸ்டெர்லைட் நச்சாலைக்கு எதிராக 30 ஆண்டுகளாகப் போராடி வருகிற உணர்வோடு இந்தக் கூட்டத்திற்கு முன்னால் நான் நிற்கிறேன்" என்று உரையாற்றினார்.

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள் | சங்கொலி