தமிழர் நலன் காக்கும், தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்டும் திராவிட இயக்க அரசியல் மரபை மீறாத ஆளுநர் உரையை வரவேற்கிறேன். நமது தனித்துவமான இருமொழிக் கொள்கை, தமிழ்நாட்டின் மாநில உரிமை, மக்கள் நலன் ஆகியவற்றில் உறுதிப்பாடு, மாநில எதிர்காலம் காக்கப்பட "தேசியக் கல்விக் கொள்கை 2020"-ஐ எதிர்க்கும் திடமான குரல், வரலாற்றில் இல்லாத அளவிலான நிதிப் பற்றாக்குறை நிலவும் சூழலிலும் தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்கும் தீவிரம், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முனைப்பு, கனிமவளங்களை முறைப்படுத்தி அரசின் வருவாயை இரட்டிப்பாக்கும் திட்டம், அனைத்தையும் உள்ளடக்கிய சமூகநீதிப் பாதைக்கான உள்ளடக்கம், மாநில அரசின் உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றிய அரசை நட்புணர்வுடன் அணுகும் முறை என இன்றைய ஆளுநர் உரை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்
திருவனந்தபுரம் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மையத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் 29.07.2026 அன்று நடைபெற்றது.
மேலும் படிக்க »






