வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரை

‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரை

புதுடெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற ‘Vaiko in Parliament’ (நாடாளுமன்றத்தில் வைகோ) 4 தொகுதிகள் கொண்ட நூல் வெளியீட்டு விழாவில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். நூல் வெளியீடு & பிரமுகர்கள்: ராகுல் காந்தி இந்நூலை வெளியிட, அகிலேஷ் யாதவ் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்; பல்வேறு தேசிய மற்றும் மாநிலக் கட்சித் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அர்ப்பணிப்பு: இக்கட்டான காலங்களிலும், சோதனைகளிலும் தனக்குத் துணையாக நின்ற தனது மனைவி திருமதி ரேணுகா தேவி அவர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் இந்நூலை அர்ப்பணிப்பதாக வைகோ நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். நினைவுகள் & அனுபவங்கள்: நாடாளுமன்றத்தில் தனது 30 ஆண்டுகால அனுபவங்கள், அண்ணாவின் 1963-ஆம் ஆண்டு வரலாற்றுப் பேச்சை மீண்டும் நாடாளுமன்றப் பதிவேட்டில் பதிவு செய்தது, ஈழப் பயணம் மற்றும் இந்திரா காந்தி தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இறுதி சபதம்: மகாராணா பிரதாப் சிங்கின் வீர வரிகளை மேற்கோள் காட்டி, தமிழ்நாட்டின் புகழை உயர்த்தவும், திராவிட இயக்கத்தின் வெற்றிக்காகவும், மதவாத சக்திகளை எதிர்த்தும் இறுதி மூச்சு வரை களத்தில் போராடுவேன் என உறுதிமொழி ஏற்றார்.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான Vaiko in Parliament நூல் வெளியீட்டு விழா 04.08.2026 அன்று புதுடெல்லியில் உள்ள Constitution Club of India அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றும்போது, “தமிழ்நாட்டின் புகழை உயர்த்தவும் திராவிட இயக்கம் வெல்லவும் என்னை நானே அர்ப்பணித்துக் கொள்வேன்!” என்று குறிப்பிட்டார். அவரது உரை வருமாறு:

கதிர் வெடித்துப் பிளம்பு விழ

கடல் கொதித்துச் சூடாற்ற

முழுமைமிகு நிலப்பரப்பின்

முதற் பிறப்பு தோன்றிவிட

நதிவருமுன் மணல் தருமுன்

முன்தோன்றி மூத்தகுடி

பதிமதுரைப் பெருவெளியில்

பாண்டியர் கொற்றம் கண்டதுமான

உயிரினும் மேலான செந்தமிழே வணக்கம்.

I am Vaiko, a product of dravidian stock. I am standing here to pour my emotional sentiments of immense gratitude from the core of my heart. I thank all the distinguished leaders of political parties, respectful spectators, affectionate friends from visual media and print media. It will be very pertinent to quote a couplet of thirukkural the greatest piece of literature of all times to guide entire humanity consisting 133 chapters containing 1330 couplets. I quote the first couplet of 11th chapter regarding gratitude.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும்

ஆற்றல் அரிது.

The translation of this couplet by Reverent G.U.Pope goes like this. The gift of heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.

I would exterd my gratitude to the leader of the opposition Lok Sabha, the glittering star of the Indian political Horizon. The future Prime Minister of India of Mr. Rahul Gandhi ji, who launched the four volumes containing all my specches in both the houses of Parliament over a period of 30 years.

I thank former Chief Minister of Uttar Pradesh, Honourable Akilesh Yadav ji, who received the first set of four volumes here. I thank Honourable Rajmohan, Minister of School Education in Tamil Nadu to represent the vibrant Chief Minister of Tamil Nadu who had eradicated corruption from every field Honourable Joseph Vijay.

I would thank my esteemd bossom friend elder brother, still the lion of Kashmir reflecting his father, former Chief Minister and Union Minister, President of National Conference Dr Faruk Abdullah. I thank former Union Home and Finance Minister

Honourable Mr. P.Chidambaram Member of Parliament. I will at the end I have to say a few words and I have to take a vow today and that I will do it after all the speakers

என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்திருக்கின்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நான் ஆற்றிய ஆங்கில உரைகளை 'Vaiko in Parliament (நாடாளுமன்றத்தில் வைகோ)' என்று நூல் தொகுப்புக்களாக வாய்ப்பித்துக் கொடுத்த குமுதம் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் வரதராஜன் அவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டவன்.

இந்த நூல்களை எங்கே அச்சிடுவது? என்று நானும், செந்திலதிபன் அவர்களும் பல நாட்களாக விவாதித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் அலைபேசி ஒலித்தது. மறுமுனையில் குமுதம் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் வரதராஜன் பேசினார்.

"உங்கள் இல்லத்தில் நான் அருந்திய சிற்றுண்டியின் சுவையை இன்னும் மறக்கவில்லை. அதுபோன்ற சுவையான சிற்றுண்டியை எங்கும் நான் அருந்தியதே இல்லை. நீங்கள் எங்கள் வீட்டிற்கு வருவதாகச் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் வரவே இல்லை" என்று சொன்னபோது, "நானையே வருகிறேன்" என்று கூறினேன். அதன்படி சென்றேன்.

"என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். "நாடாளுமன்றத்தில் 30 ஆண்டுகாலத்தில் நான் ஆற்றிய ஆங்கில உரைகளை பிழை திருத்தம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினேன். "எங்கே அச்சிடப் போகிறீர்கள்?" என்று கேட்டார். "ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். முடிவெடுக்க வில்லை" என்று கூறினேன். "நாங்களே அச்சிடு கிறோம்; எங்கள் செலவில் அச்சிடுகிறோம். நீங்கள் ஒரு பைசா செலவழிக்க வேண்டியது இல்லை. தமிழ்நாட்டுக்குச் செய்கின்ற கடமையாகக் கருதி நாங்களே வெளியிடுகிறோம்" என்று கூறினார்.

முன்பக்க, பின்பக்க அட்டையை அழகான முறையில் வடிவமைத்தவர் என் அருமைத் தம்பி விக்டர் அவர்கள். குறிப்பிட்ட நாட்களுக்குள் தயாரித்து விட்டார். குமுதம் நிறுவனத்திற்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

2,500 ரூபாய் விலை அதிகமாகத் தெரியலாம். தாள்கள் மிக மிக விலை உயர்ந்த தரமான தாள்கள். படிக்கின்ற போது சலிப்படையாமல் படிக்கின்ற வரையிலான எழுத்துருக்கள் (Fonts). புத்தக வெளி யீட்டு விழாவில் இருபது சதவிகிதம் தள்ளுபடி செய்து விடுவோம் என்று அவர் அறிவித்தார். இரண் டாயிரம் ரூபாய் கொடுத்தால் நான்கு தொகுப்பு களையும் பெற்றுக் கொண்டு செல்லலாம்.

மனிதருள் மாணிக்கம் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் எந்த நூலையும் வெளியிட்டது இல்லை. அவரது பிரியமகள் இந்திராகாந்தி பிரியதர்ஷினி எந்த நூலையும் வெளியிட்டது இல்லை. அவர்களது அருமை மகன் ராஜீவ்காந்தி அவர்களும் எந்த நூலையும் வெளியிட்டது இல்லை. அந்த குடும்பத் திலேயே முதன் முதலாக இன்றைக்கு ராகுல் காந்தி அவர்களால் வெளியிடப்பட்டது 'Vaiko in Parliament (நாடாளுமன்றத்தில் வைகோ)' என்ற நூல்களின் தொகுப்பாகும்.

வைகோ விடுதலைப் புலிகளை தீவிரமாக ஆதரித் தவர். உங்கள் தந்தையாரை கடுமையாக விமர்சித் தவர். எனவே நீங்கள் இந்த விழாவில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று சிலர் அறிக்கையும் தந்தார்கள். தகவலும் அனுப்பினார்கள்.

ஆனால், என்னுடைய புதல்வர், நூற்பது தொகுதி களிலும் இப்படி ஒருவர் பணியாற்றியதில்லை என்று சொல்லத்தக்க வகையில் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதியில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்ற கழகத்தின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்களும், நானும், ராகுல்காந்தி அவர்களைச் சந்திக்கச் சென்றோம். ராகுல்காந்தி துரை வைகோவிடம் மிகவும் நேசம் காட்டினார். நூல்களின் மூலத்தைக் கொடுத்துவிட்டு, "I have heavily criticized your father in my speeches" என்றேன். "That is simple politics. Ignore it. அது அரசியல். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்றார். அப்படிப்பட்ட பெருந்தன்மை மிக்கவர் ராகுல் காந்தி.

நான் கடுமையாக விமர்சித்திருந்தாலும், இந்த விழாவில்வந்துபங்கேற்று,இந்நூல்தொகுப்பினை வெளியிட்ட உயர்ந்த உன்னதமான குணத்திற்கு ராகுல்காந்தி அவர்களுக்கு தலைவணங்கி நான் நன்றி தெரிவிக்கிறேன்.

இந்த நூல் வெளியீட்டு விழா இன்றைய நாளில் நடைபெறாது என்றுதான் நான் நினைத்தேன். இங்கே நடைபெற்ற மாணவர் கிளர்ச்சி. 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் புரட்சியை நினைவூட்டு வதைப் போல புரட்சியாக வெடிக்கத் தொடங்கிய போது, இனி நவம்பர் திங்கள் கடைசியில்தான் இந்த விழாவை நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் அதில் ஒரு திருப்பம் ஏற்பட்டு, கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, கிளர்ச்சி நின்றது. திட்டமிட்டவாறு விழாவை நடத்த முடிவெடுத்தோம்.

நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் என்றுதானே அறிவித்திருந்தீர்கள்? விஜய் வருகிறாரா? என்று அடுக்கடுக்கான அலைபேசிகள், தொலைபேசிகள். நான் கண நேரம் யோசித்துப் பார்த்தேன். அவர் வந்திருந்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டிருப்பார்கள். டெல்லி காவல்துறை அவருக்கு முறையான பாதுகாப்பு தராது. இந்த விழா நடக்காது. அப்படிப்பட்ட சங்கடமான நிலைக்கு அவரை ஆளாக்கக் கூடாது என்று முதலமைச்சரை நேரில் சந்தித்து, "நீங்கள் வருவதை நானே தவிர்க்க விரும்புகிறேன். நீங்கள் வர வேண்டாம். உங்கள் கட்சியிலிருந்து யாராவது ஒருவரை அனுப்புங்கள். இந்த உரைகள் தமிழாக்கம் செய்யப்படுகிறது. செந்திலதிபன் பாதியை தமிழாக்கம் செய்து முடித்துவிட்டார். கவி (விநாயகம்) ஓரளவு முடித்துவிட்டார். முழுமையாக தமிழாக்கம் செய்யப்பட்ட பின்பு ஒரு நாள் சென்னை மாநகரில் முதலமைச்சர் அவர்களே நீங்கள் வெளியிட வேண்டும். யார் பெறுவது என்பதை பின்னர் தீர்மானிப்போம்" என்று நான் கூறினேன். அப்படித்தான் இந்த விழா ஏற்பாடாயிற்று.

இங்கே உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் என்னோடு உடன் இருந்தவர் - இசையின்பால் மிகுந்த பற்றுக் கொண்டவர் - உயிர் நண்பர் பேபி அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் தமிழகம் தந்த டி.ராஜா அவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாணிக்கம் தாகூர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்தி வந்தவுடன், நம் விழாவை எவராலும் தடுக்க முடியாது, அதற்கு இவர் இடம்தர மாட்டார் என்று நான் அப்பொழுதே முடிவெடுத்தேன்.

நாடாளுமன்றத்தில் நான், எனது இடது பக்கத்தில் பேராசிரியர் மனோஜ் குமார் ஜா, வலது பக்கத்தில் ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் இருப்போம். எங்களை Three musketeers மூன்று மாவீரர்கள் என்று அழைப்பார்கள்.

நான் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது கடைசியாக விடைபெறுவதற்கு முன்பு பிரியா விடையில் எல்லோரும் என்னைப் பாராட்டிப் பேசினார்கள். அப்போது ஜான் பிரிட்டாஸ், நான் நேசிக்கின்ற மேதகு பிரபாகரன் அவர்களையும் கட்டிக் காட்டி, எனக்குப் பிரபாகரன் வைகோதான் என்று நாடாளுமன்றத்திலேயே பேசினார்.

நீங்கள் தான் நிகழ்ச்சியை தொகுத்துத் தர வேண்டும் என்று ஜான் பிரிட்டாஸ் அவர்களிடம் நான் கூறினேன். இசைவு தந்தார் அதற்கு மிக்க நன்றி

இங்கே உரையாற்றி விடைபெற்றுச் சென்றிருக்கின்ற எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோது என்னை வந்து சந்தித்து, ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படு கிறார்களே, இதுகுறித்து நீங்கள் சட்டக் கல்லூரி விடுதியில் வந்து பேச வேண்டும் என்று கூறியபோது, அவரை முன் பின் எனக்குத் தெரியாது. காரில் அழைத்துச் சென்று சட்டக் கல்லூரி விடுதியில் பேசிவிட்டு வந்தேன். அவர் அதை இங்கே நினைவு வூட்டினார்.

சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவுத் அவசர வேலையாகச் சென்றிருக்கிறார். சரத்பவார் அவர்கள் வர இயலாத நெருக்கடியான சூழல் மராட்டியத்தில். அதனால்தான் அவரது புதல்வியும் நீண்ட நேரமாக இங்கே இருக்க முடியவில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் இங்கே வருகை தந்து சிறப்பித்த முகமது பஷீர் எம்.பி. அவர்களுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்-என்னை உயிராக நேசித்த ஐயா மூப்பனார் அவர்களின் அருமைப் புதல்வர் ஜி.கே.வாசன் அவர்களுக்கும், குமுதம் நிறுவனத்தின் சார்பில் உரையாற்றிய சங்கர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

It gives immense pleasure to extend my thanks to my party treasurer the fiery orator Mr. Senthilathipan who have translated English volumes into tamil language. The publication of these Tamil volumes will be released in the month of October in the city of Chennai probably I am expecting the concept from honourable Chief Minister of Tamil Nadu, I am duty bound to express my hearty thanks to Raja Vaiyapuri, elder son of my brother Vai.Ravichandran who have devoted his time and energy for the combination of all my speeches which lasted for more than six months. ஆறு மாதம் அவன் பாடுபட்டான். அத்தனையையும் கூகுளிலிருந்து பதவிறக்கம் செய்து, உரைகளாகத் தயாரித்துக் கொடுத்தான். தற்போது கனடாவில் இருக்கிறான். ராஜா வையாபுரிக்கும், எங்கள் தாயகத்தின் மேலாளர் கவி அவர்களுக்கும், முகப்பு அட்டை தயாரித்துத் தந்த விக்டர் ஞான எபிநேசர் அவர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்து வதற்கு சென்னையிலிருந்து புறப்பட்ட நாளில் இருந்து இதுவரை பாடுபட்டு வருகின்ற துணைப் பொதுச்செயலாளர் ஜீவன் அவர்களுக்கும், டில்லி மாநில மதிமுக செயலாளர் பழனிக்குமார் அவர் களுக்கும், அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் குருநாதன், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் தென்றல் நிசார் அவர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர் நாதமாகத் திகழ்கிற தொண்டர்படைத் தோழர் களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

I thank respected Mr.Gopalkrishna Gandhi, grand son of Mahatma Gandhi ji and Rajaji, who was the then Governer of West Bengal have gone through all the pages of these volumes and made necessary corrections கோபால கிருஷ்ண காந்தி இந்த நூலை முழுமையாக பிழை திருத்தம் பார்த்தார்.

My heartiest thanks goes to former Dirctor General of Police Mr. A.X. Alexender who have gone through page by page to make necessary correction கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அலெக்சாண்டர் பிழை திருத்தம் செய்து கொடுத்தார்.

The entire credit for the astonishing arrangements to make this function a grand success goes to the principal secretary of MDMK who represents Trichy Parliamentry Constituency Mr. Durai Vaiko who delivered a heart touching speech in his welcome address. உங்கள் நெஞ்ச உணர்வுகளை வருடுகின்ற விதத்தில் இங்கே உரையாற்றிய திருச்சி நாடாளு மன்ற உறுப்பினர் இந்த விழா சிறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததற்கு நன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

I have dedicated these four volumes of this book to whom, do you know இந்த நான்கு தொகுப்புகளையும் யாருக்கு அர்ப்பணித்திருக்கிறேன் தெரியுமா? உங்களால் யூகிக்க முடியாது. என் வாழ்க்கையில் புயல் வீசிய காலங்களில், என் வாழ்க்கையில் சித்ரவதைக்கு நிகரான கொடுமைகள் நிகழ்ந்த காலங்களில், எந்த இயக்கத்தில் 29 ஆண்டுகள் உயிரைக் கொடுப்பதற்குத் சித்தமாக உழைத்துத் கொலைகாரன் என்ற பழியைச் சுமந்து தூக்கி எறியப்பட்டேனே, அந்தத் துயரமான நாட்களில், ஐந்தைந்து ஆண்டு காலம் நான் சிறைவாசத்தை அனுபவித்த நாட்களில், மாதம் ஒரு நாள், இரண்டு நாள் வீட்டில் இருந்திருப்பேன். என் குழந்தைகளின் மழலைப் பேச்சை நான் கேட்டது இல்லை. என் பிள்ளைகள் வளர்வதை நான் கண்டதில்லை. எவற்றை எல்லாம் ஒரு மனிதன் இழக்கிறானோ These are the precious moments வாழ்க்கையில் உன்னதமான தருணங்கள் அவைதான். மழலைச் சொல் கேட்பதும், பிள்ளைகள் மடியில் தவழ்வதும், அவர்கள் வளர்வதைக் காண்பதும்தான் ஒரு மனிதனின் இனிமையான தருணங்கள். அவை எனக்குக் கிடைக்கவில்லை. அனைத்தையும் இழந்திருக்கிறேன்.

அவ்வளவு சோதனைகளிலும் ஒரு பவுன் நகை வேண்டும் என்று என் மனைவி கேட்டதில்லை. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் என் ஆருயிர் சகோதரன் காளிமுத்துவுக்கு நிகரான பேச்சாள இதுவரை தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. அவரும் நானும் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டி யிட்டோம். என்னுடைய கார்கள் பெட்ரோல் இல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன என்று ஜூனியர் விகடனில் செய்தி வந்ததை அறிந்த மாத்திரத்தில் மறுநாள் காலை முதல் பெட்டிக்கடை வைத்திருப்பவர் ஐந்தாயிரம் ரூபாய், தேநீர் கடை வைத்திருப்பவர் ஐந்தாயிரம் ரூபாய், ஐம்பதாயிரம், இலட்சம் என்று தமிழ்நாடு முழுவதும் தோழர்கள் கொட்டிக் கொண்டே இருந்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழருக்கும் ஒரு கார், ஒன்றியச் செயலாளருக்கு ஒரு கார், இந்திய கம்யூனிஸ்ட் அத்தனை செயலாளர்களுக்கும் கார் என வந்த பணத்தை எல்லாம் அள்ளிச் செலவழித்தேன்.

அப்படி இருந்தும், தேர்தல் தோல்விக்குப் பின்பு தி.மு.க. தோழர்கள் வீடுகள் உடைக்கப்பட்டு விட்டன என்று கேள்விப்பட்டு நான் அவர்களின் வீடுகளுக்குச் சென்று மூன்றாயிரம், ஐந்தாயிரம் என்று கொடுத்தேன். அப்படியிருந்தும் எனக்கு ஐந்தைந்து இலட்சம் ரூபாய் மீதம் இருந்தது. நான் நினைக்கவே இல்லை. அந்தப் பணத்தை என்ன செய்வது என்று திட்டமிடவும் இல்லை. என் துணையாயார் என்னிடம் சொன்னார், நீங்கள் ஈழத்திற்குச் சென்றீர்கள். வன்னிக் காடுகளுக்குச் சென்றீர்கள். தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்துவிட்டு மயிரிழையில் உயிர் தப்பி வந்தீர்கள். உங்களால் அவர்கள் தயாரித்த மூன்று இன்ஜின்கள் பொருத்தப்பட்ட பெரிய படகை அவர்கள் இழந்தார்கள். எத்தனை இலட்சம் அவர்களுக்கு நட்டம்? இந்தப் பணத்தைப் புலிகளுக்குக் கொடுங்கள் என்றார். நான் நினைக்கவில்லை. என் மகள் ராஜீக்கு ஒரு தோடு வாங்க வேண்டும். என் மகள் கண்ணகிக்கு ஒரு வளையல் வாங்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லையே? புலிகளுக்குக் கொடுத்து விடுங்கள் என்றல்லவா கூறினார்!

விடுதலைப் புலிகளின் தமிழ்நாட்டுப் பிரதிநிதி அன்புமலை அழைத்து, ஐந்து இலட்சத்தைப் பெற்றுக் கொண்டு செல்லுங்கள் என்றேன். ஒருக்காலும் வாங்க மாட்டேன் என்றார். தலைவர் அருகில் இருந்தால் வாங்கிக் கொள்ளச் சொல்வார் வாங்காவிடில் என் வீட்டுப் பக்கம் தலைகாட்டக் கூடாது. மேலிடத்திற்குத் தகவல் சொல்லுங்கள். தலைவர் வாங்கச் சொல்கிறாரா? இல்லையா? என்று பிறகு பார்ப்போம் என்றேன்.

மூன்று நாள் கழித்து அன்பு வந்தார். தலைவர் வாங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டார் என்றார். ஐந்து இலட்சத்தை அன்புவிடம் கொடுத்தேன். இந்த யோசனையைச் சொன்னவர் யார்? எனக்குத் திருமணமாகி கிட்டத்தட்ட 55 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த 55 ஆண்டுகால இல்லற வாழ்வில் ஒரு பொட்டு நகை வேண்டும் என்று அவர் கேட்டதும் இல்லை, நான் வாங்கிக் கொடுத்ததும் இல்லை. என் வாழ்வில் இவ்வளவையும் தாங்கிக் கொள்வதற்குப் பட்டறைக் கல்லாக ஆதார சுருதியாக இருப்பவர் என் வாழ்க்கைத் துணையாயார் ரேணுகா தேவி அவர்கள்தான். அவருக்குத்தான் இந்த நூல்களை அர்ப்பணித்து இருக்கிறேன். Therefore, I have dedicated these four volumes to my spouse Mrs. Renugadevi. who have stood by me in all my trials and tribulations (கைதுபட்டல், ஆரவாரம்) extending courage and confidence.

என் நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதி ஓட்டத்தின் பிரதிபலிப்பு யார் தெரியுமா? நீங்கள், நீங்கள், நீங்கள் (கூட்டத்தினரைப் பார்த்துச் சொல்கிறார்). ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வந்திருக்கிறீர்கள். 150 பேர் விமானத்தில் வந்திருக்கிறீர்கள். வாழ் நாளில் என்றைக்கும் விமானத்தில் பயணம் செய்யாதவர்கள். தங்கள் பொருளாதார நெருக் கடியை மறந்துவிட்டு கடன் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் காலடிகளில் என் நன்றியை வைக்கிறேன். நீங்கள் இருக்க எனக்கு என்ன கவலை? இனி நம்மை எதிர்ப்பார் எவரும் இல்லை. நம்மை நசுக்க முனைவோர் தொலைந்து இடம் தெரியாமல் போவார்கள்.

முக்கியமான காலகட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. ஒரு சரியான முடிவெடுத்ததற்குப் பின்பு இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த நூலுக்கு 23 பேர் அணிந்துரை தந்திருக்கிறார்கள். எந்த நூலுக்கும் 23 பேர் அணிந்துரை தந்தது கிடையாது. Forward given by 23 celebrities. I owe my hearty thanks to all the 23 celebrities. இங்கே அமர்ந்திருக்கின்ற ஹென்றி திபேன் உள்ளிட்ட அந்த 23 பேருக்கும் என் தலைதாழ்ந்த வணக்கத்தோடு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நெகிழ்ச்சிய உதராணம், 1980 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி காலை பத்தரை மணிக்கு பிட்ச் என்று பெயரிடப்பட்ட விமானம் விபத்துக்கு உள்ளாகி, அதில் பயணித்த சஞ்சய் காந்தியும், அதை உடன் ஓட்டி வந்த பைலட் சுபாஷ்செளத்ரியும் விமானம் கீழே விழுந்து நொறுங்கும்போதே மடிந்து போனார்கள். இருவரும் பலியானார்கள். இந்திரா காந்தி அம்மையார் பிரதமர். செல்வ மகன் சஞ்சய் காந்தி மடிந்த உடம்பை சடலமாக அடக்கினார். அவரைப் பார்க்கப் போகவில்லை. உடன் இருந்து பயணித்து இறந்த விமானி சஃப்சௌத்ரி வீட்டிற்குச் சென்றார் இந்திராகாந்தி அம்மையார்.மூன்று மணி நேரம் அங்கே இருந்தார். கணவனை இழந்த அவரது மனைவிக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். அதற்குப் பின்பு தான் சஞ்சய் காந்தியைப் பார்க்க வந்தார்.

மாநில மகேந்தர் வளாகத்திற்கு வந்தபோது, ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப் பினர் அவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை. சஞ்சய் காந்தியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசி அமர்ந்தவுடன், என்னுடைய பெயர் வாசிக்கப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட உறுப் பினரை நோக்கி, Don't go away சபையை விட்டு வெளியே போகாதே! என் பேச்சைக் கேட்டுவிட்டுப் பின்பு செல். It is highly improper and discourteous to critize a departed soul. இறந்தபோன ஒரு மனிதரைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சிப்பது மிக மிக அநாகரிக மான செயல். அதை அந்த உறுப்பினர் இங்கே செய்தார். அவருக்குச் சொல்கிறேன், சபைக்கும் சொல்கிறேன், இந்திராகாந்தி இறந்த மகனைப் பார்க்கப் போகவில்லை. உடன் பயணித்து இறந்த விமானியின் மனைவிக்கு ஆறுதல் கூறச் சென்றார்.

1977 கடைசியில் மற்றொரு நிகழ்ச்சி நடைபெறுகது. வடகிழக்கு மாகாண எல்லைகளுக்கு மேலே ஒரு விமானம் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்தவர் அன்றைய பிரதமர். ஜோர்காட் என்ற இடத்தில் விமானம் தீப்பபிடித்துக் கொண்டது. விமானப் படை விமானிகள் ஐந்து பேர் அதில் இருந்தார்கள். with in a second they have to decide வயிற்றுப் பகுதியைக் கொண்டு கீழே மோதினால் ஒரு வேளை நாம் ஐந்து பேரும் உயிர் பிழைக்கலாம். ஆனால் பிரதமர் நிச்சயமாக பலியாவார். மூக்குப் பகுதியைக் கொண்டு கீழே மோதினால் நாம் ஐந்து பேர் உடனே சாம்பலாகி விடுவோம். ஒரு வேளை பிரதமர் தப்பிக்கலாம். with in a second they took the decisioon, they opted for nose diving மூக்குப் பகுதியைக் கொண்டு கீழே மோதினார்கள். தீப்பிடித்தது. ஐந்து விமானப்படை விமானிகளும் அங்கேயே சாம்பலாகிப் போனார்கள். விமானத்தில் இருந்த பிரதமர் ஒரு காயமும் இல்லாமல் தூசியை தட்டிக் கொண்டே வெளியே வந்தார். Media persons approached him, How did you escape? எப்படி நீங்கள் தப்பினீர்கள்? God almightty, God saved me கடவுள் என்னைக் காப்பாற்றினார் என்று பதில் சொன்னார் அந்த பிரதமர். அந்த ஐந்து விமானிகள் கடவுள் வடிவத்தில் வந்து என்னைக் காப்பாற்றினார் என்றாவது கூறினாரா? இல்லை.

ஐந்து விமானிகள் உடல்கள் டெல்லிக்குக் கொண்டு வந்து எரியூட்டப்பட்டது. அந்த இறுதி நிகழ்ச்சிக்கு பிரதமரும் செல்லவில்லை. அமைச்சர்கள் ஒருவர் கூட செல்லவில்லை.

இந்திராகாந்தி அம்மையார் was an example for humanism. The referred Prime Ministeris an example for hypocrisy. நான் பேசி முடித்தவுடன் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து ஆரவாரம் செய்து கைதட்டினார்கள். அரை மணி நேரம் கழித்து பிரணாப் முகர்ஜி ஒரு சீட்டை கொடுத்துவிட்டார். Prime Minister madam Indra Gandhi was very much moved by your speech. She have sent me a note appreciating and applauding your speech உங்களைப் பாராட்டிக் கொடுத்திருக்கின்ற சீட்டைத்தான் உங்களுக்குத் தருகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது போன்று மிகவும் பரபரப்பூட்டுகின்ற பல சம்பவங்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றன. நான் அந்த செய்திகளுக்குள் சென்றால் அது வேறு திசைக்குச் சென்றுவிடும் என்பதால் நான் சொல்ல விரும்ப வில்லை. ஆனால், அதில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும்.

நான் வன்னிக்காடுகளுக்குச் சென்றுதிரும்பியபோது, நீங்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்லக் கூடாது. பெரிய எதிர்ப்புக் கலவரம் ஏற்பட்டுவிடும் என்று சில தோழர்கள் என்னை எச்சரித்தார்கள். நான்கு நாட்கள் பொறுமையாக இருந்தேன். என்னதான் வந்துவிடும் பார்ப்போம். இராணுவத்தையே பார்த்து விட்டு வந்துவிட்டோமே, இங்கே என்ன வந்து விடும்? என்று நான் நாடாளுமன்றம் சென்றேன். நண்பகல் உணவு வேளை முடிந்து, இரண்டு மணிக்கு சபை தொடங்குகிறது. 2.10 மணிக்கு நான் சபைக்குள் நுழைந்தேன். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை குடியரசுத் தலைவர் அமருகின்ற இடத்தில் இருந்த துணை சபாநாயகர் நஜ்மா ஹெப்துல்லா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நான் அவைக்குள் நுழைந்ததைப் பார்த்தவுடன், Welcome, Welcome, Welcome Mr. Gopalsamy, We are all happy to see you in one piece. உடலில் ஒரு பாகம்கூட பாதிப்பு ஆகாமல் முழு உடல்நலத்துடன் திரும்பி வந்ததற்கு வாழ்த்துக்கள் என்றார்கள்.

காங்கிரஸ் நண்பர்களோடு ஆயிரம் முறை மோதி இருப்பேன். காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று They gave me a standing ovation. மகிழ்ச்சி, மகிழ்ச்சி, நீங்கள் காயப்படாமல் வந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று நான் கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் என்னைப் பாராட்டினார்கள். இந்தச் சம்பவத்தையும் என்னால் மறக்க முடியாது.

இதைப் போல ஓராயிரம் சம்பவங்கள். இறுதியாக மாநிலங்களவையில் ஜான் பிரிட்டாஸ் பேசி முடித்து, பதில் சொல்வதற்கு நான் பேச அழைக்கப் பட்டபோது, நான் எழுந்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் 1963 இல் கன்னிப் பேச்சில் ஆற்றிய உரையின் இரண்டு பத்திகளை எடுத்து நான் மேற் கோள் காட்டினேன். காரணம், பின்னால் வந்து பிரசுரித்தவர்கள் அண்ணா பேச்சின் இரண்டு மூன்று வரிகளை நீக்கிவிட்டார்கள். அவர், I belong to a Drividan stock; I am proud to call myself a dravidian என்று கூறிவிட்டு, I demand the right of self determination சுயநிர்ணய உரிமையை நான் வலியுறுத்துகிறேன் என்று பேசினார். பின்னால் வந்தவர்கள் அதைப் புத்தகங்களில் பதிப்பிக்காமல் எடுத்துவிட்டார்கள்.

அடியேனுக்கு வேலையே என்ன தெரியுமா? எவனும் வரலாற்றை அழிக்க முடியாது. என்னுடைய பேச்சில் அண்ணா இப்படிப் பேசினார் என்று நாடாளுமன்றப் பதிவேட்டில் 1963 இல் பேசிய பேச்சை இப்பொழுது மீண்டும் பதிவு செய்திருக்கிறேன். பதிவாகி இருக்கிறது.

ஜான் பிரிட்டாஸ் மிகவும் நெகிழ்ந்து போனார்.

Now, I recall the roaring thunder of Maharana prada singh இடியென முழங்கிய மகாராணா பிரதாப் சிங், after the defeat of haldighati ஹால்திகார்ட்டி போரில் தோற்றதற்குப் பின்பு அவர் முழங்கிய வாசகங்களை இங்கே சொல்கிறேன்,

Till such a time breads of dry grass available காட்டுப் புல்லில் செய்யப்பட்ட ரொட்டித் துண்டுகள் கிடைக்கின்ற காலம் வரை

Till such a time water in streams available ஓடுகின்ற நீரோடைகளில் தண்ணீர் இருக் கின்ற வரையிலும்

Till such a time I breathe the air of the atmosphere காற்று வெளியில் இருக்கக் கூடிய பிராண வாயுவை நான் சுவாசிக்கின்ற வரை

I will raise my sword for the liberation of my motherland என் தாய் நாட்டை விடுவிப்பதற்கு நான் வாளை உயர்த்திக் கொண்டே இருப்பேன் என்று மகாராண பிரதாப் சிங் கூறினார்.

இப்பொழுது இந்தக் கணத்தில் I take a vow ஒரு உறுதிமொழி எடுக்கிறேன். I take a vow. I do declare that I will raise my fightying sword சுழலுகின்ற என் போர் வாளை உயர்த்திக் கொண்டே இருப்பேன், for the victory of dravidian movement திராவிட இயக்கத்தின் வெற்றிக்காகவும், and for the glory of Tamil Nadu the cradle ancient civilization பழமையான நாகரிகத்தின் தொட்டில் பூமியாகிய தமிழ்நாட்டின் புகழை உயர்த்தவும், திராவிட இயக்கம் வெல்லவும் என்னை நானே அர்ப்பணித்துக் கொள்வேன். I will fight tooth and nail the abominable pernicious, malicious, disastrous forces of Hindutva இந்துத்துவ விஷ சக்திகளை வீழ்த்துவதற்குப் போராடுவேன். They will be thrown away into the bay of Bengal lock stuck and barrel. அடி முதல் நுனி வரை அவர்களைத் தகர்த்து வங்காள விரிகுடா கடலுக்குள் வீசி எறிகிற துணிச்சலோடு போராடுவேன்.

இதுதான் இந்த நூல் வெளியீட்டு விழாவில் இந்த வைகோ மேற்கொண்டிருக்கின்ற சபதம். நன்றி வணக்கம்.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.

‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரை | சங்கொலி