வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம்

 கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம்

ோமையார்பாளையம், மரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் காட்டுக்குள் மேய்ச்சலுக்கு போன தங்கள் மாடுகளை தேடி சென்று உள்ளனர். அவர்கள் மீது மான் வேட்டையாடச் சென்றதாக சாக்யா பகுதி வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். கர்நாடக வனத்துறையினரின் வெறித் தனமான துப்பாக்கிச் சூட்டில் ஜகன்னாத தொட்டி என்ற இடத்தை சேர்ந்த பெரிய நாயகம் என்பவரின் மகன் அந்தோணிசாமி (வயது 50), மரியமங்கலத்தை சேர்ந்த யாகூப் என்பவரின் மகன் ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42), லாசர் தொட்டி என்ற இடத்தைச் சேர்ந்த சவேரியப்பன் என்பவரின் மகன் குமார் (33) ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் ஹனூர் தாலுகாவில் மரியமங்கலம் கிராமம் உள்ளது. இந்த ஊர் காவிரி வனவிலங்கு சரணாலய வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

இன்று அதிகாலை சோமையார்பாளையம் மற்றும் சாக்யா குறுவட்ட வன அலுவலர்கள் அந்தப் பகுதிக்கு ரோந்து சென்றுள்ளனர்.

சோமையார்பாளையம், மரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் காட்டுக்குள் மேய்ச்சலுக்கு போன தங்கள் மாடுகளை தேடி சென்று உள்ளனர். அவர்கள் மீது மான் வேட்டையாடச் சென்றதாக சாக்யா பகுதி வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

கர்நாடக வனத்துறையினரின் வெறித் தனமான துப்பாக்கிச் சூட்டில் ஜகன்னாத தொட்டி என்ற இடத்தை சேர்ந்த பெரிய நாயகம் என்பவரின் மகன் அந்தோணிசாமி (வயது 50), மரியமங்கலத்தை சேர்ந்த யாகூப் என்பவரின் மகன் ஜான்ரோஸ் பீட்டர் (வயது 42), லாசர் தொட்டி என்ற இடத்தைச் சேர்ந்த சவேரியப்பன் என்பவரின் மகன் குமார் (33) ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

மரியமங்கலத்தைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவரின் மகன் மகிமைதாஸ் (வயது-48) என்பவர் காயமடைந்துள்ளார்.

மரியமங்கலம் ஊரை அடுத்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், சிலர் துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததாகவும், அதனால் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கர்நாடக வனத்துறையினர் கூறுகின்றனர்.

“வேட்டையில் ஈடுபட்டவர்கள் வசம் ஆயுதங்கள் இருந்தன. இது ஒரு என்கவுண்டர் சம்பவம்.“ என கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. கடும் கண்டனத்துக்குரியது.

மான் வேட்டையாட சென்றார்கள் என்று காரணம் கற்பித்து மூன்று தமிழர்களின் உயிரை பறித்துப் பச்சை படுகொலை நடத்தியுள்ள கர்நாடக மாநில அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேய்ச்சலுக்கு போன மாடுகளை தேடி வனப் பகுதிக்குள் சென்ற அப்பாவித் தமிழர்களை சுட்டுக் கொன்ற வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வதுடன் அவர்களை கைது செய்து கூண்டில் நிறுத்த வேண்டும்.

உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையையும் கர்நாடக மாநில அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 16.08.2026 அன்று விடுத்துள்ள கண்டன அறிக்கை.

வைகோ மதிமுக பொதுச்செயலாளர்

வைகோ பொதுச் செயலாளர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.)

கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் | சங்கொலி