வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தனித் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது;

தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தனித் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது;

சட்டப்பேரவையில் இத்தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றிய முதலமைச்சர்,

முதன் முதலில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில், மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களால் 1891-இல் எழுதப்பட்ட ‘மனோன்மணீயம்’ எனும் நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’, 1970 நவம்பர் 23-ஆம் தேதி முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்பதையும்,

கடந்த திமுக ஆட்சியில் 2021 டிசம்பர் 12-ஆம் தேதி முதல் மாநிலப் பாடலாக அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர், ஒன்றிய பாஜக அரசின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ‘வந்தே மாதரம்’ பாடலை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முதலில் பாடச் செய்தது தமிழ் மக்களுக்கு விடப்பட்ட அறைகூவல் ஆகும்.

தேசிய இனங்களின் மொழி உரிமையைப் பறித்து ஆர்.எஸ்.எஸ் இன் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தி இந்துராஷ்டரத்துக்கு அடித்தளம் அமைக்க வந்தே மாதரம் பாடலை திணிப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இந்தியா என்பது தனித்தனி தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை டெல்லி ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பாராட்டுக்குரியது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! | சங்கொலி