வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுன்ராஜ் பங்கேற்ற திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்

அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுன்ராஜ் பங்கேற்ற திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்

திருப்பூரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கழக வளர்ச்சி குறித்து 28 நிர்வாகிகள் கருத்துரையாற்றினர். புதிதாக தேர்வான துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் சி. கிருஷ்ணன் பாராட்டப்பட்டார். கழக அவைத்தலைவர் ஆ. அர்ஜூன்ராஜ் சிறப்புரையாற்றினார்.

திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம் 05.06.2026 அன்று காலை 10 மணிக்கு திருப்பூர் கே.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் ஆடிட்டர் இரா.அன்பழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 400க்கும் அதிகமான கழக தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

வீரபாண்டி, கணேஷ், மோகன், நல்லூர் சர்புதீன், ராஜ், மண்ணறை திருமூர்த்தி, சதீஷ், அனுப்பர்பாளையம் பிரபு, இராயபுரம் திலீபன் மன்றத்தின் சக்தி, சரவணன், பொதுக்குழு உறுப்பினர் இராமசாமி, 9 ஆவது வட்டம் பாண்டியன், இராமசாமி, வைகோ சம்பத், சிவானந்தம், மேட்டுப்பாளையம் கணேஷ், பாண்டியன் நகர் கங்கை அமரன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் முத்துராஜ், துணைச் செயலாளர் பூபதி, நகர துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமயந்தி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் இ.என்.கந்தசாமி, கழக தேர்தல் பணி துணைச் செயலாளர் எஸ்.ரெத்தினசாமி உள்ளிட்ட 28 தோழர்கள் கழக வளர்ச்சி குறித்து தங்களது கருத்துகளை விளக்கி உரையாற்றினார்கள்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் சி.கிருஷ்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாராட்டுக்கு நன்றி தெரிவித்து டாக்டர் சி.கிருஷ்ணன் உரையாற்றினார்.

கழக கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்களின் கருத்துரைக்கு பின்னர் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இராயபுரம் பகுதிக் கழக செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுன்ராஜ் பங்கேற்ற திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம் | சங்கொலி