வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

திமுகவின் பொய்யும் அபாண்டமான குற்றச்சாட்டும் நிலை நிற்காது. மெய் தான் நிலைத்து நிற்கும்

திமுகவின் பொய்யும் அபாண்டமான குற்றச்சாட்டும் நிலை நிற்காது. மெய் தான் நிலைத்து நிற்கும்

சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தென்காசி மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில், திமுக மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றினார். திராவிட இயக்க வரலாறு, பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஆகியோரின் அரசியல் பயணம் மற்றும் தனது அனுபவங்களை எடுத்துரைத்தார். “பொய்யும் அபாண்டமான குற்றச்சாட்டும் நிலை நிற்காது; மெய்தான் நிலைத்து நிற்கும்” என வைகோ தெரிவித்தார்.

“திமுகவின் பொய்யும் அபாண்டமுமான குற்றச்சாட்டும் நிலை நிற்காது; மெய்தான் நிலைத்து நிற்கும்!” என்று 09.07.2026 அன்று சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தென்காசி மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

இடியும், மின்னலும், புயல் காற்றும், பெருமழையும், நெருப்பு வெயிலும் இயற்கையில் மாறி மாறி வருவது போல 1964 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21 ஆம் தேதி சென்னை மாநகரில் அமைந்துள்ள கோகலே அரங்கத்தில் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் கருத்தரங்கில் பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னால் நான் உரையாற்றி, அவரது பாராட்டைப் பெற்ற நாள் முதல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்னை நான் முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு 29 ஆண்டுகள் அந்த இயக்கத்தில் கட்டிக் காப்பதற்கு என்னால் இயன்ற பணிகளை என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து பணியாற்றி வந்த காலத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் 1959 இல் அவர் இயக்கி திரைக்கு வந்த நாடோடி மன்னன் படத்தின் தலைப்புப் பாடலே செந்தமிழே வணக்கம் என்று தொடங்கும்.

அப்படி ஒரு திரைக்காவியம் இதுவரை வந்ததுமில்லை என்று சொல்லுகின்ற விதத்தில் வீரரங்கனாகவும், மார்த்தாண்டனாகவும் உலவி, திரைப்படங்கள் மூலமாகவே கோடிநூறு மக்களிடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கொண்டு சேர்த்தார். ஒரு சுற்றுப் பயணத்தில் ஊர் ஊராக இரவெல்லாம் பேசி வந்த அண்ணா அவர்கள், தொழுதூரினருக்கு அருகே காரை நிறுத்தி, உடன் வந்த ராஜகோபாலை ஒரு தேநீர் வாங்கிக் கொண்டு வா என்று அனுப்பி, முன்சீட்டில் அண்ணா அமர்ந்திருந்தார். காரில் தி.மு.க கொடி பறந்து கொண்டு இருக்கிறது. அந்த காலை வேளையில் வேலைக்குச் செல்கின்ற உழைப்பு பெண்கள் இந்த கருப்பு சிவப்புக் கொடியைப் பார்த்து காரை நோக்கி வந்தார்கள். முன் இருக்கையில் அமர்ந்திருக்கின்ற பேரறிஞர் அண்ணாத்தான் அந்தக் கட்சியை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா என்பது அவர்களுக்கு தெரியாததால், “நீங்கள் என்ன எம்.ஜி.ஆர். கட்சியா? எம்.ஜி.ஆர் வந்திருக்கிறாரா?” என்று கேட்டபோது, இல்லையம்மா எம்.ஜி.ஆர் வரவில்லை. மற்ற ஆட்கள்தான் வந்திருக்கிறோம் என்று கூறியவுடன் அவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றார்கள்.

தேநீரை வாங்கி வந்த காஞ்சிபுரம் ராஜகோபாலிடம், கட்சியை குடிசைகள் வரை எம்.ஜி.ஆர்தான் கொண்டு சேர்த்திருக்கிறார் என்று அண்ணா கூறினார்.

அண்ணா மறைந்தபோது, யார் தலைவர் ஆவது என்ற சர்ச்சை எழுந்தபோது, தனது முழு ஆதரவை யும் டாக்டர் கலைஞருக்குக் கொடுத்து, அவரை முதலமைச்சர் பொறுப்பேற்க வைத்தார் எம்.ஜி.ஆர்.

திடீரென்று மு.க.முத்து அகில இந்திய ரசிகர் மன்றம் என்று சி.எஸ்.ஜெயராமன் தலைமையில் ஆயிரம் விளக்குப் பகுதியில் ஒரு அலுவலகத்தைத் திறந்து, தலைமைக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் தி.மு.க வட்டச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், உங்கள் பகுதியில் உடனடியாக மு.க.முத்து ரசிகர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தை என் கண்ணால் நான் பார்த்திருக்கிறேன்.

மு.க.முத்து மன்றங்களை ஊர் ஊராக அமைக்க வேண்டும் என்று கட்சியிலிருந்து கட்டளை இட்டார்கள் என்று அதிர்ச்சியுற்ற நிலையில், முதல் தேர்தலில் அண்ணா தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் நான்காயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இந்த சங்கரன்கோவிலில் ஆசிரியர் துரைராஜ் வேட்பாளராக நின்றார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து சுப்பையாவைத்தான் வேட்பாளராக்க வேண்டும் என்று கூறினோம். சுப்பையா வேட்பாளர் ஆக்கப்பட்டார். ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தோம். சுப்பையா வெற்றி பெற்றார்.

1972 இல் நான் முன்பு கூறிய காரணங்களால் ஏற்பட்ட குமுறலில் எம்.ஜி.ஆர். తనకుப் போட்டியாக கலை உலகில் ஒருவரைக் கொண்டு வருகிறார்கள். தன் மன்றங்களுக்குப் போட்டியாக மன்றங்கள் அமைக்கிறார்கள் என்று மன வேதனைப்பட்டு திருக்கழுக்குன்றத்திலும், ஆயிரம் விளக்குிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தவறு செய்கின்றவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய சொத்துக் கணக்கை காட்ட வேண்டும் என்று கூறினார்.

ஆகஸ்ட் 04, 05, 06 தேதிகளில் மதுரை மாநகரில் உடம்பெல்லாம் வெட்டுக் காயங்கள் பட்ட தியாக சீலர் மதுரை முத்து அவர்கள் நடத்திய மாநாட்டிற்கு 500 மாணவர்களை நான் அழைத்துச் சென்றேன். அப்போது நான் குருவிகுளம் ஒன்றியப் பெருந்தலைவர், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர். முத்து மதுரை இது; முத்தமிழ் மதுரை இது; முன்னேற்றக் கழகத்தின் கொடி பறக்கும் கோட்டை இது என என் உயிரினும் இனிய நண்பர் டாக்டர் காளிமுத்து அவர்கள் அமைத்த முதல் வளைவு ஆகும். அந்த மாநாட்டில் நானும் பின்வரிசையில் மேடையில் இருந்தேன். எம்.ஜி.ஆர். பெயரை யார் உச்சரித்தாலும் மாநாடு அலை கடலாக ஒலித்தது. ஆயிரம் இடிகள் விழுவதைப் போல ஓசை எழுந்தது. எம்.ஜி.ஆர் பேச அழைக்கப்பட்லார். பேசினார். இந்த அமைச்சர்கள் யாரும் தவறு செய்யவில்லை என்று சுட்டிக் காட்டி பேசிவிட்டு, மாநில சுயாட்சியைக் காக்க நான் இராணுவத்தையே சந்திப்பேன் என்றார். ஐந்து நிமிடத்திற்கு மேல் கைத்தட்டல் ஒலி நிற்க வில்லை.

அறிஞர் அண்ணாவுக்குப் பின்பு கலைஞருக்கு நிகரான சொற்பொழிவாளர்கள் கட்சியில் யாரும் இல்லை. அவர் அற்புதமாக உரையைத் தொடங்கினார். மதுரைக் காஞ்சியிலிருந்து சில காட்சிகளை எடுத்துச் சொல்லி அண்ணணன் மதுரை முத்து அவர்களைப் புகழ்ந்து மிக சிறப்பாக 15 நிமிடம் உரையாற்றியிருப்பார். கூட்டத்தில் ஆரவாரமே இல்லை. இதில் அவர் அதிர்ச்சி அடைந்தார். எனக்கு மயக்கமாக வருகிறது, இதோடு பேச்சை நிறுத்தி விடுகிறேன் என்று கலைஞர் நாற்காலியில் சென்று அமர்ந்துவிட்டார்.

எம்.ஜி.ஆர் பதறிப் போனார். டாக்டர்கள் வந்து பரிசோதனை செய்தார்கள். அப்பொழுதே கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுவிட்டது. நான் என் தந்தையார் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்று வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மறுநாளைக்கு மறுநாள் தலைமைக் குழுகூடுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று நானும், என் நண்பன் சண்முகசுந்தரமும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்குக் கீழே மரத்தடியில் நின்றோம். செயற்குழு முடிந்து ஒரு மணிக்கு நாவலர் இறங்கி வந்தார். “அண்ணே எம்.ஜி.ஆர் பிரச்சினையில் என்ன முடிவு எடுத்தீர்கள்?” என்று கேட்டேன். கட்சியை விட்டு நீக்கியாச்சு” என்று எகத்தாளமாக சிரித்துக் கொண்டு போய்விட்டார்.

அடுத்து வந்தவர் வேலூர் விஸ்வநாதன். அவர் அண்ணாவால் கண்டெடுக்கப்பட்ட ஒரு தலைவர். நாடாளுமன்றத்தில் அதிக கேள்விகள் தொடுத்தவர். அவர் வாடிய முகத்தோடு இறங்கினார். அவரிடம் சென்று கேட்டேன். அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அண்ணே என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டேன். எல்லாம் போச்சய்யா, கட்சி இதோடு போச்சய்யா, எம்.ஜி.ஆரை நீக்குகிறார்கள். என்ன செய்வது, எதிர்காலம் மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

பத்து நாட்களுக்குள் உங்களை ஏன் கட்சியிலிருந்து நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு எம்.ஜி.ஆருக்கு நோட்டீஸ் சென்றிருக்கிறது. எட்டாவது நாள் ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டார்.

கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாவலர், பேராசிரியர், மதுரை முத்து ஆகியோர் ஆவேசமாக பேசினார்கள். என் தந்தைக்கு புற்று நோய் என்று டாக்டர் கூறிவிட்டார். நான் அதிர்ச்சி அடைந்தவனாக வேலூர் மருத்துவமனையிலேயே இருந்தேன். தி.மு.க்கழகம் தமிழ்நாடு முழுவதும் கூட்டம் போட்டது. ஒரு கூட்டத்தைக் கூட எம்.ஜி.ஆரின் ரசிகர்களும் தொண்டர்களும் நடத்த விடவில்லை. திருநெல்வேலியில்சந்திப்பிள்ளையார் கோவில் முனையில் கூட்டம் போட்டார்கள். கூட்டம் தொடங்கிய பத்து நிமிடத்திலேயே சர சரவென நாலா திசையிலிருந்தும் கல் விழுந்தது. தம்பிதுரை, மஸ்தான், சூரியநாராயணன் ஆகியோர் மேடையை விட்டு இறங்கி ஓடிச் சென்றுவிட்டார்கள். கூட்டம் நடத்த முடியவில்லை.

வேலூர் மருத்துவமனையில் இருந்த எனக்குத் தகவல்வந்தது. நான் அங்கிருந்து திருநெல்வேலிக்கு வந்தேன். கல்லூரி, கல்லூரியாகச் சென்றேன். மாணவர்கள் என் பின்னால் திரண்டு நின்ற காலம். 500 மாணவர்களைத் திரட்டினேன். திருநெல்வேலியில் ஒவ்வொரு வட்டத்திலும் காலை முதல் மாலை வரை கொடியேற்றினேன். சட்டமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் பத்மநாபன், வாகன விபத்தில் ஒரு கால், கை முடமானவர். அவர் நகரச் செயலாளர். அவர் காரில் அமர்ந்து வந்தார். அனைத்து வட்டங்களிலும் நான் தி.மு.க கொடியை ஏற்றி வைத்தேன்.

(Photo Caption)

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ராகுல் காந்தி அவர்களைக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்தார் (14.07.2026)

தேரடியில் கூட்டம் போட்டேன். துரைமுருகனையும், வலம்புரி ஜானையும், என்.வி.என்.செல்வத்தையும் அழைத்துக் கொண்டு வந்தேன். அவர்களை நாற்காலியில் அமர வைத்து, நான் கீழே உட்கார்ந்து கொண்டு அந்தக் கூட்டத்தை நடத்தினேன்.

அப்பொழுது எடுத்த எடுப்பிலேயே இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் கல் எறிந்த வீரர்களே, இப்பொழுது வாருங்கள். வைகோ கூட்டத்தை நடத்துகிறான். எத்தனை கல் வரும். எதற்கும் கலங்காத மாணவர் பட்டாளத்துடன் கூட்டம் நடத்துகிறேன். தைரியம் இருந்தால் அன்றைக்குக் கலவரம் செய்தவர்கள் இன்றைக்கு வரட்டும் என்று கூறினேன். கூட்டம் மிகவும் கம்பீரமாக நடைபெற்றது. இரவு 12 மணிக்குத்தான் கூட்டம் முடிந்தது. இப்படித்தான் தி.மு.க்கழகத்தைப் பாதுகாக்க உழைத்தேன்.

தேர்தல் வந்தது. வேன் பிரச்சாரம் சென்று கொண்டே இருக்கிறோம். முக்குலத்தோருக்கு நான் என்ன வெல்லாம் செய்திருக்கிறேன். முதுகுளத்தூர் ஆயுள் கைதிகள் 9 பேரை விடுதலை செய்தேன். மூன்று கல்லூரிக்கு அனுமதி கொடுத்தேன். அந்த முக்குலத்தோர் நமக்கு நன்றியோடு இல்லையே? திண்டுக்கல் இடைத்தேர்தலில் என்ன நடந்தது பார்த்தீர்களா? என்று கலைஞர் மிகவும் வருத்தப்பட்டுக் கூறினார்.

அண்ணே உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். முக்குலத்தோர் நமக்கு துரோகம் செய்யவில்லை. எங்கள் ஜில்லாவில் இரத்தினவேல் பாண்டியன் மாவட்டச் செயலாளர். எங்கள் மாவட்டத்தில் உள்ள தேவர்கள் வசிக்கின்ற ஊர்களில் நான் செல்லப் பிள்ளை. ஒவ்வொரு தேவர் வீட்டிலும் முருகன் படம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் படம், உங்கள் படம்தான் இருக்கும். ஆகையால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறினேன். சரி, தேர்தல் வருகிறது பார்ப்போம் என்றார்.

சங்கரன்கோவில் தொகுதியில் 1977 தேர்தலில் திமுக எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முன்பு யூனியன் சேர்மனாக இருந்த சண்முகச்சாமியிடம், அண்ணாச்சி, இந்த தேர்தல் முடியும் வரை என்னுடனேயே இருக்க வேண்டும். குருக்கள்பட்டி சென்று, முன்பு சேர்மனாக இருந்த முத்துப்பாண்டியனைச் சந்தித்து, அண்ணே இந்தத் தேர்தலில் நீங்கள் என் கூடவே இருக்க வேண்டும் என்று கூறினேன். நூறு ரூபாய்க்கு மூன்று கார்களை வாடகைக்குப் பிடித்தேன். பெட்ரோல் கார். டீசல் கிடையாது. வேண்டியவர்களிடம் எப்படியாவது இருநூறு, முன்னூறு வாங்கி அந்தக் கார்களுக்கு பெட்ரோல் போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்தேன்.

விடியற்காலை ஐந்து மணிக்கு வருவேன். பழனிச்சாமி நாயக்கர் கமிஷன் கடை முன்பு இருந்த பட்டியல்கல்லில் பேப்பரை விரித்துப் படுத்துக் கொள்வேன். ஆறு மணிக்கு டீக்கடை திறந்து டீ வாங்கி வந்து, என்னை எழுப்பிக் கொடுத்துவிட்டு, குளிப்பதற்கு வெந்நீர் போட்டு வைத்திருக்கிறேன் என்பார்.

சண்முகச்சாமிக்கு ஒரு கார். முத்துபாண்டியனுக்கு ஒரு கார். வேட்பாளருக்கும் எனக்கும் ஒரு கார் எடுத்திருந்தோம். அதன் பிறகு அதை மாற்றி, ஒரு காரில் நானும், சண்முகச்சாமியும், முத்துப்பாண்டியனும் ஏறிக் கொண்டு ஊர் ஊராகச் சென்று ஒவ்வொரு ஊர் மன்றத்திலும், வீடற்றவர்களும் அமர்ந்து கொண்டு அனைத்து கிராம மக்களையும் வர வழழைத்து, சண்முகச்சாமி 15 நிமிடமும், முத்துப்பாண்டி 15 நிமிடமும், நான் 20 நிமிடமும் திமுக வெற்றிக்காக பேசுவோம்.

அதற்கு முன்பு மதராஸ் மூல மக்களும், யாதவர் குல மக்களும் பக்கத்தில் கார்த்தகுடி போன்றுப்பட்டு இரண்டு பக்கமும் கொலைகள் விழுந்தது. இரண்டு சமூகமும் உறைங்கும் சமூகம். சுமைதாங்கி நம்பி வாழும் சமூகம். ஈதமான சமூகம். இப்படி இரண்டு சமூகம் தினமும் போலிஸ் கொலைகள் நடக்கிறதே! இதை நிறுத்த வேண்டும் என்று நினைத்து, இரு சமூகத்தாரும் ஒன்றாக பேசிக் கொண்டே வந்து, கடைசியில் திருநெல்வேலியில் சமாதானக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, சண்முகச்சாமியையும், முத்துப்பாண்டியையும் அழைத்துச் சென்று இரு சமூகத்தாரும் எட்டாம் வாரத்தில் அனைத்துத் தேவர்மக்களையும் வர வைத்து, நமது காமராஜரின் யாதவ சமூகத்து மக்களையும் வரவழைத்து, வெறுப்பை பகை மாற்றி, பாசம் பரிமாற வழி கொடுத்து, இனி நமக்குள் சண்டையிடையே வரக்கூடாது என்ற அமைதியை ஏற்படுத்தினேன்.

அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெறவே முடியாது என்று சொன்னார்கள். திருச்சிக்கு தெற்கே ஒரு இடத்தில் கூட திமுக வெற்றிபெறவில்லை. சங்கரன் கோவில் தொகுதியில் 534 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

கம்பீர மாளிகாதான் இந்த வெற்றிக்குக் காரணம். அவர் இல்லை என்றால் சங்கரன்கோவிலில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று தலைமைக் கழகத்தில் கலைஞர் கூறினார்.

நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. அமைச்சர் ஆக வேண்டும் என்று நான் எப்போதும் ஆசைப்பட்டது இல்லை. நாடாளுமன்றம் செல்ல வேண்டும். தமிழக உரிமைகளுக்காக பேச வேண்டும்; திராவிட இயக்கத்திற்காக பேச வேண்டும் எனவே எனக்கு நாடாளுமன்றம் செல்வதற்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்று கலைஞரிடம் கேட்டேன்.

இப்போதைக்கு தலைமை மிகவும் சோதனையாக இருக்கிறது. தற்போது தொகுதி மாற்றை அனுப்புகிறேன். அடுத்த முறை பார்ப்போம் என்றார். அடுத்த நாடாளுமன்றம் செல்வதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்தார். நான் நாடாளுமன்றம் சென்று தி.மு.க்கழகத்தையும், கலைஞரையும் பெருமை யுறும் வகையில் பேசினேன். இந்த இயக்கத்தை எதிர்த்து பேசினேன். மாநில சுயாட்சி உரிமைக்காக பேசினேன். பெரியார் கொள்கைகளைப் பேசி நாடாளுமன்றத்தில் நான் முத்திரை பதித்ததை கலைஞர் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

ஒரு முறை நாவல்டீ மகோத்ராவை அழைத்து, வைகோ முந்தைய நாள் என்ன பேசினார் தெரியுமா? ஐந்தாவது நாள் மாநில தொழிற்சாலையை பற்றி விவாதித்து நாடாளுமன்றத்தில் வந்து. பேச இருந்த பிரகாஷ்சந்திர உறுப்பினருக்கு வாய்ப்பு வரவில்லை. ஒரு மணிக்கு நாடாளுமன்றம் ஒத்திவைப்பேசியில் தொடர்பு கொண்டு, அண்ணே நம் எம்.பி. வர வில்லை. மாறாக அவரும் வருவது. நான் என்ன செய்ய என்று கேட்டேன். நீங்கள் பேசுங்கள் என்றேன். நான் ஒன்றும் தயாரிக்கவில்லை அண்ணே என்றேன். உங்களுக்கு என்ன தோணுகிறதோ, பேசுங்கள் என்றார்.

நான் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முன்பு இந்திரா காந்தியும், ராஜீவ்காந்தியும் மிகவும் கவனமாக தொடக்கத்தில் பேசுவது சபையை விட்டு வெளியே செல்ல எழுந்தார். தொடக்க உரைகளே, அமைதியை விட்டு வெளியே செல்லாதீர்கள். என் பேச்சை கேட்டுவிட்டு நீங்கள் வெளியே செல்லுங்கள். "இறந்துபோன ஒரு மனிதரைப் பற்றி விவாதிப்பது கீழ்invalid செயல். இத்தாலியத் அம்மாயாரின் கோரண்டர். அவருடன் பயணித்த விமானியும் இறந்து போனார். இத்தாலிய அம்மாயார் தன் மகன் உடலைப் பார்க்க போகவில்லை. பலியான விமானி வீட்டிற்குச் சென்றார். நான்கு மணி நேரம் விமானியின் மனைவி அருகிலேயே அமர்ந்திருந்தார். ஆறுதல் கூறினார். அதன் பிறகுதான் தனது மகன் சஞ்சய் காந்தியின் உடலைப் பார்க்கச் சென்றார்.

அன்பு மாநிலத்தில் ஜோஷிடம் போல் வான் வெளியில் விமானத்தில் பிரதமர் மொரார்ஜி தேசாய் பறந்து கொண்டிருந்தார். ஜோஷி என்ற இடத்தில் சென்றுபோது விமானம் பழுதுக்கு உள்ளானது. இயங்கவில்லை. வான்பது நொறுங்கி போகிறது. விமானப் படையைச் சேர்ந்த ஐந்து விமானிகள் விமானத்தை செலுத்தி கொண்டிருந்தார்கள். விமானத்தை எப்படி கீழே இறக்குவது என்று விமானிகள் முடிவு செய்து, விமானத்தை பகுப் பகுதியாக கொண்டு இறக்கினால் விமானம் வெடித்து நாம் ஐந்து பேரும் சாம்பலாகிவிடுவோம். வயிற்றுப் பகுதியைக் கொண்டு இறக்கினால் விமானம் தீப்பிடித்து எரிந்து ஐந்து பேரும் உடல் கருகி சாம்பலாவார்கள். வயிற்றுப் பகுதியில் அமர்ந் திருந்த மொரார்ஜி தேசாய் பத்திரமாக வெளியே வந்தார்.

அதற்குள் ஆம்புலென்ஸ் வந்துவிட்டது. மொரார்ஜி தேசாய் மீது ஒரு தூசு கூட விழவில்லை. அவர் வந்தார். எப்படி நீங்கள் பிழைத்தீர்கள்? என்று நிருபர்கள் கேட்டபோது, கடவுள் என்னைக் காப்பாற்றினார் என்றார். ஐந்து விமானிகள் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றினார்கள் என்று சொல்வதற்கு மனது வரவில்லை. விமானிகளின் உடல்கள் டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டு, சுடுகாட்டில் வைத்து எரிக்கப்பட்டனர். ஒரு அமைச்சர்கூட அந்த இறுதிச்சடங்கு செல்லவில்லை. மொரார்ஜி தேசாயும் போகவில்லை. அவர் இந்திராந்தி, இவர் மொரார்ஜி தேசாய். பஞ்சக மனம் படைத்தவர் மொரார்ஜி தேசாய்” என்று நான் பேசினேன்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்துவிட்டார்கள். பிறகு நேரம் கழித்து பிரணாப் முகர்ஜி என்னிடம் வந்து ஒரு சீட்டைக் கொடுத்தார். இந்திரா காந்தி உங்கள் பேச்சில் மிகவும் உருகிப் போய் உங்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் என்று அந்த சீட்டைக் காண்பித்தார்.

சம்பந்தப்பட்டி பேசாதீர்கள் பாருங்கள் என்று கலைஞர் பாராட்டியது உண்டு.

கலைஞர் மீது உள் எரிச்சலை ஒப்பு முடித்தது. தையப் புடைத்தேன். அவனைக் கொன்று விடாதீர்கள், கொலை வழக்கு பதிவாகிடும் என்று காவல்துறையினர் என்னைப் பிடித்து இழுத்துச் சென்றார்கள். உள் எரிச்சலையுடைய காரை சிறையினரிடம் ஒப்படைத்தவன் இந்த வைகோ.

இன்றைக்கு எந்த சொல்மைக்கு இரயில் கலைஞர் சென்றுபோது, அதிமுக அமைச்சர் பிரசன்னா செய் கிறார் என்று அந்த இரயிலில் கலைஞர் பயணம் செய்த பெட்டியின் முன்பாக சாப்பிடாமல் காலை பனிரெண்டு பயணம் செய்தேன். காலையில் எழுந்து பெட்டியின் கதவைத் தட்டி சாப்பாட்டை நீட்டி கோன். தயாளு அம்மாள் வாங்கிக் கொண்டார்.

இங்கே எங்கு நீங்கள் வந்தீர்கள்? நீங்கள் பயணம் செய்த பெட்டி பின்னாலல்லவா இருக்கிறது? என்று கலைஞர் கேட்டார். இல்லைங்க அண்ணே, இரவெல்லாம் இங்கேதான் இருந்தேன் என்றவுடன், என்ன சொல்கிறாய்? என்று கேட்டார் ஒரு அமைச்சர், எனக்கு போட்ட கூட பெட்டியில், கருணாநிதியும் அவரது மனைவியும் எப்படி வரமுடியும்? அவர்களை வெளியே செல்லுங்கள் என்று இரயில்வே அதிகாரியிடம் சென்று கூச்சல் போட்டார். உடன் அழைத்து வந்து சொன்னார். நான்கு படுக்கைகள் கொண்ட பெட்டியில் படுத்திருந்த இருவரை வெளியேற்றிவிட்டேன். அவர் யார்? என்றார், சார் மன்னித்துக் கொள்ளுங்கள். எங்கள் தலைவர் முன்னாள் முதல்வர் குடும்பத்தோடு இரண்டு படுக்கை கொண்ட கூட பெட்டியில் வருகிறார்.

ஆனால் ஒரு அமைச்சர் எனக்கு தனிமை வேண்டும். கூபே பெட்டியை காலி செய்து கருணாநிதியை அங்கே போகச் சொல்லுங்கள் என்று தர்க்கம் செய்கிறார். அதனால் நீங்கள் எனக்குக் கொடுத்த படுக்கைக்குச் சென்றுவிட்டால், இங்குள்ள நான்கு படுக்கைகளும் காலியாகி விடும். அந்த அமைச்சர் கேட்கின்ற தனிமை முழுமையாகக் கிடைத்துவிடும். தயவு செய்து இந்த உதவியைச் செய்யுங்கள் என்றேன். அவர் உடனே மறுக்காமல் கீழே இறங்கி, தனது பெட்டி, படுக்கை, சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு எனக்கு ஒதுக்கப்பட்ட படுக்கைக்கு சென்று படுத்துக் கொண்டார்.

அதன் பின்பு இரயிலே அதிகாரியை அழைத்து, அமைச்சர் தனிமை வேண்டும் என்று கேட்டார் அல்லவா? இரண்டு படுக்கை பெட்டிக்கு பதிலாக நான்கு படுக்கை வசதி கொண்ட பெட்டி காலியாக இருக்கிறது. அமைச்சரை அங்கு செல்லச் சொல்லுங்கள் என்றேன். அவர் அமைச்சரிடம் கூறிய வுடன், எனக்கு முதலில் அந்த கூபேவைத்தான் ஒதுக்கியிருந்தீர்கள். அதனால் அதை எனக்குத் தந்துவிட்டு, கருணாநிதியை வெளியே போகச் சொல்லுங்கள் என்றார்.

அதற்குள் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் கூடி விட்டார்கள். கலைஞரும், அவரது துணைவியாரும் இந்த இரயிலில் பயணித்துக் கொண்டு வருகிறார்கள். அமைச்சர் இப்படி பிடிவாதம் செய்கிறார் என்று நடந்ததைக் கூறினேன். அவ்வளவு பேரும் அமைச்சர் ஒழிக! கலைஞர் வாழ்க! என்று முழக்கம் எழுப்பினார்கள். இரயில்வே அதிகாரி வந்து, சார், அவர்களை காலி செய்துவிட்டு போகச் சொல்லுகஙா சார் என்றார். நீங்கள் கேட்டதற்காக அமைச்சரால் டாக்டராகப் பணிபுரிகின்ற குழந்தைச் சேர்ந்த பாட்டியை எழுப்பி என் படுக்கைக்கு மாற்றி விட்டேன். இப்பொழுது அந்தப் பெட்டி காலியாக இருக்கிறது. அமைச்சர் அந்தப் பெட்டிக்குச் செல்ல மாட்டாரா? கலைஞர் போக வேண்டுமா? அதெல்லாம் நடக்காது. நான் இங்கேயே நிற்பேன். இரயில் நகரவது இந்தக் கதவைத் தட்டினால் கை துண்டாக ஆக்கப்படும் என்று அமைச்சரிடம் போய்ச் சொல்லுங்கள் எனக் கூறினேன்.

அமைச்சர் தலையைக் குனிந்துகொண்டே வந்து என்னைப் பார்க்காமலேயே நான்கு படுக்கை கொண்ட பெட்டிக்குள் சென்று விட்டார். இதற்குப் பின்பு ஒரு காவல் ஆய்வாளர், ஒரு துணை ஆய்வாளர், பத்து காவலர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அமைச்சரை இரயிலில் ஏற்றி வைத்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டியவர்கள். ஆனால் அவர்களும் இரயிலில் ஏறிவிட்டார்கள். அவர்களுடன் நான் பேசிய போது, சார், நீங்கள் ஏதாவது செய்து விடுவீர்கள் என்று உங்களுக்குப் பயந்து மொத்த காவல் துறை யினரையும் பாதுகாப்புக்கு அழைத்து வந்துவிட்டீர் என்று கூறினார்கள். அதனால் இன்றைக்கு நீங்களும் தூங்கப் போவது இல்லை. நாங்களும் தூங்க முடியாது என்றார்கள்.

என் கையில் பெரிய இரும்பு இருந்ததா? என்ன இருந்தது? தன்னம்பிக்கை தான். ஆனால் கதவைத் தொட்டால் கையை வெட்டி விடுவேன் என்று அமைச்சருக்கு எச்சரிக்கை விட்டேன். இந்த இரண்டு எழுத்து ஆயிரம் பிரங்கிங்களுக்குச் சமம் என்பதால் அமைச்சர் நான் கூறிய பெட்டியில் பயணித்தார்.

காலையில் கலைஞரிடம் வார்த்தையைக் கூறியவுடன், என்னிடம் கூறியிருந்தால் நாங்கள் இருவரும் அங்கே சென்றுவிட்டுப் போகிறோம். எதற்காக கூடிய விடிய நீங்கள் இங்கே காத்திருந்தீர்கள் என்றார் கலைஞர். அவரது கண்களில் இருந்து கண்ணீர் அவரை அறியாமல் உருண்டு கொண்டு இருந்தது. இது சத்தியமான வார்த்தை.

திமுகவில் இன்றைக்கு இருக்கின்ற முன்னணித் தலைவருக்கு வலப் பக்கமும், இடப் பக்கமும் வருகின்ற சூறாவளி சூரர்கள் நான் செய்ததில் ஆயிரத்தில் ஒரு பங்காவது கலைஞருக்குச் செய்து உண்டா? நீங்கள் பதவி கொடுத்ததைச் சொல்கிறீர்கள். நான் உயிரையே கொடுப்பதற்குத் தயாராக பணியாற்றி இருக்கிறேன்.

ஈழத்துக்கு, வன்னிக்காட்டுக்குச் சென்றேன். வைகோ பலியானார் என்று செய்தித் தாள்களில் செய்தி வெளியிட்டார்கள். அப்போது நான் எழுதிய நண்பர் குட்டி மூலமாக கொடுத்துவிட்ட கடிதத்தை கலைஞர் பத்திரிகைகளுக்குக் கொடுத்து விட்டார். கலைஞர் முதலமைச்சர். அனைத்துப் பத்திரிகைகளிலும், “என்னையே நான் பலியிட்டுக் கொள்வேன் வை.கோபாலசாமி கலைஞருக்கு உருக்கமான கடிதம்” என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

இராணுவத்தால் சுற்றி வளைத்துத் தாக்கப் பட்டு, மிகவும் சிரமப்பட்ட சூழ்நிலையில் உயிர் பிழைத்து, மல்லிப்பட்டணத்திற்கு அருகே பிள்ளையார் திடலுக்கு வந்து வீட்டிற்கு வந்து விட்டேன். கலைஞரைப் பார்க்கச் சென்றேன்.

தலைவர் பிரபாகரனிடம், தமிழ்நாட்டிற்குச் செல்லவில்லை, ஈழத்திலேயே இருந்துவிடு கிறேன் என்று கூறினேன். திமுகவிலிருந்து உங்களை நீக்க விடக்கூடாது அண்ணா. அதனால் நீங்கள் உடனே சென்றுவிட வேண்டும். இந்திய இராணுவ தளபதி கால்கட் வந்து பார்த்துடன், உங்களுக்கும், திமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என்று உங்களை பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதனால் நீங்கள் போய்த்தான் ஆக வேண்டும் என்றார். அதனால் தான் வன்னிக் காட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தேன்.

"வை.கோபாலசாமி கொல்லப்பட்டார்" என்று முதல் நாள் மாலை ஏடுகளில் எட்டுக் கால செய்தி வெளியாகி இருந்தது.

காலையில் கலைஞர் வீட்டுக்குச் சென்றவுடன், தயாளுமணி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதார். என்ன இப்படிப் பண்ணிட்டீங்க என்று தயாளு அம்மாள் கூறினார்.

கலைஞர் இருக்கின்ற அறைக்குச் சென்றேன். நான் வந்தது தெரியும். அவர் வரவில்லை. உட்காராமல் நின்றுகொண்டே இருந்தேன். முக்கால் மணி நேரம் கழித்து வந்தார். கும்பிட்டேன். சைகையில் அப்படி வரச் சொன்னார். பற்று இருக்கலாம். வெறி இருக்கக் கூடாது. நான் முரசொலி மாறனிடம் சொல்லி, அவர் ராஜீவ் காந்தியிடம் சொல்லி, ராஜீவ்காந்தி இராணுவத்தை அனுப்பி உங்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறார். இல்லையா? என்றார் கலைஞர்.

அப்படி இல்லை அண்ணா, இராணுவம் சுற்றி வளைத்துச் சுட்டதில் நூலிழையில் நான் உயிர் தப்பினேன். விடுதலைப் புலிகளின் தலைவர் 57 புலிகளையும், பொட்டுஅம்மான் தலைமையில் 100 பேரையும் உடன் அனுப்பி என்னைக் காப்பாற்றிக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் சேர்த்தார்கள் என்ற உடன் கலைஞரின் முகம் வியர்த்து விறு விறுத்தது.

இராணுவத் தாக்குதலில் இருந்து தப்பி வந்தேன் என்று கூறுகிறான். திமுகவில் இருக்கின்ற அத்தனை பேரும் இவனை பெரிய ஹீரோவென்று நினைப் பார்களே! இப்பொழுது இருக்கின்ற பெயரும் செல்வாக்கும் விட நூறு மடங்கு வந்துவிடுமே என்று அவருக்கு தாங்க முடியாத கோபம்.

பத்திரிகையாளர்கள் கேட்டால் நான் சொல்லலாம் அல்லவா? என்று நான் கேட்டவுடன், சொல்லுங்கள் என்றார் கலைஞர்.

அங்கிருந்து பேராசிரியர் வீட்டிற்குச் சென்றேன். அவர் ஒரு பனியனைப் போட்டுக் கொண்டு மாடியில் உட்கார்ந்திருந்தார். நான் சென்றவுடன், அப்பா வந்துட்டியாப்பா என்று கட்டிப் பிடித்துக் கொண்டு என்னப்பா இப்படி பண்ணிட்ட, எப்படி தப்பிப் போய்விட்டேன் தெரியுமா? என்று கூறினார்.

நாடாளுமன்றத்திற்கு வந்தால் காங்கிரஸ்காரர்கள் கலாட்டா செய்வார்கள். ஆகையால் வரக்கூடாது என்று என்னிடம் கூறிவிட்டு மாறன் டெல்லிக்குச் சென்றுவிட்டார். நான்கு நாள் கழிந்தது. என்னதான் வந்துவிடும். இராணுவத்தையே பார்த்துவிட்டு வந்துவிட்டோம். காங்கிரஸ் எம்.பி.க்கள் என்னதான் செய்துவிடுவார்கள்? என்று நாடாளுமன்றத்திற்குச் சென்றேன்.

நண்பகல் உணவு இடைவேளைக்குப் பின்பு நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. நான் மாநிலங்களவைக்குள் நுழைந்தவுடன், அவைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நஜ்மா அப்துல்லா, “வாருங்கள் வாருங்கள். உடலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் முழுமையாக திரும்பி வந்ததை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வரவேற்கிறேன்” என்று கூறியவுடன், இடது பக்கம் அமர்ந்திருந்த அத்தனை காங்கிரஸ் உறுப்பினர்களும் எழுந்து மேஜையைத் தட்டி வரவேற்றார்கள். அவர்கள் அத்தனை பேரிடமும் சண்டையிட்டிருக்கிறேன். நீங்கள் உயிருடன் வருகிறீர்களா? என்று மிகவும் கவலைப்பட்டோம். இப்பொழுது மனதுக்கு நிம்மதி யாக இருக்கிறது என்று பாராட்டினார்கள்.

என் தொண்டையில் கட்டி வந்து புற்று நோய் என்று சந்தேகப்பட்டு, அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர் கே.கே.ஆர் கூறியபடி நான் வீட்டில் ஓய்வில் இருந்தேன். அறுவைச் சிகிச்சை நடந்தது செப்டம்பர் 18. அந்தக் கட்டியை பயாப்ஸ் செய்ய அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். செப்டம்பர் 22 ஆம் தேதி தம்பி ரகு அந்த ஆய்வறிக்கையை வாங்கிக் கொண்டு, அண்ணாச்சி ரிப்போர்ட் கொஞ்சம் மோசமாக இருக்கிறது. நான் நேராக வருகிறேன் என்றார். புற்று நோய் இருக்கிறதா? இல்லையா? என்று மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போ நமக்கு புற்றுநோய் என்று முடிவு செய்துவிட்டேன்.

நான் கவலைப்படவில்லை. வருத்தப்படவில்லை. ஆனால் “எவ்வளவு கற்பனைகளோடு இருந்தேன். இப்படி ரிப்போர்ட் வந்திருக்கே” என்று என் மனைவிதான் கண்ணீர் விட்டார்! மருத்துவர் கே.கே.யிடம் சென்றோம். என் அனுபவத்தில் இது புற்று நோய் அல்ல. அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றார். நான் கவலைப்படவில்லை டாக்டர். உங்களைப் பார்த்து இந்த அறிக்கையைக் காட்ட வந்தோம் என்றேன்.

மறுநாள் காரைக்குடியில் தமிழ் மன்றத்தில் கூட்டம். அதற்குச் செல்வதற்காக இரயிலில் அமர்ந்திருந்தேன். பேச்சாளர் தஞ்சை கூத்தாரன் ஓடி வந்து என்னைப் பார்த்து, கலைஞர் என்னை அழைத்து சிறுகுடியில் வைகோவைப் பற்றி நீ என்னவாக புகழ்ந்தாயோ! என்ன மண்ணைக் கொளுத்தியிருந்தால் நீ புகழ்வாய்? பத்து நாட்களில் பத்திரிகையில் வரப்போகின்ற ரிப்போர்ட்டைப் பார். அதிர்ச்சி அடைவாய்! பத்து நாட்களுக்குப் பின்பு என்ன நடக்க இருக்கிறது என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை. உனக்குத் தெரியும்போது அதிர்ச்சி அடைவாய் என்று கூறினார் எனக்கு ஒன்றும் புரியவில்லை அண்ணா என்றார். எனக்கும் புரியவில்லை.

நான் காரைக்குடிக்குச் சென்றுவிட்டேன். சிக்கிரி கெஸ்ட் ஹவுஸில் மதியம் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தூங்கி எழுந்து படித்துக் கொண்டிருந்தேன். காரைக்குடி இலக்கிய கழகத்தில் நான் பேச வேண்டும். குளித்துவிட்டுப் புறப்படுவோம் என்று குளிக்கச் சென்றேன். செராமிக் வாஷிங் பேசின் மீது வலது காலை தூக்கி வைத்து சோப்பு போட்டேன். அது படாரென்று உடைந்து விழுந்துவிட்டது. விழும் போதே எனது வலது கால் பெரு விரலுக்கு செல்கின்ற நரம்பு துண்டாகிவிட்டது. குளியல் அறை முழுவதும் இரத்தம். டவலை கிழித்துக் கட்டினாலும் இரத்தம் நிற்கவில்லை.

டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். ஊசி போட்டார்கள். பேண்டேஜ் போட்டார்கள். நான் பேசும் போது நின்றிருந்த இடம் முழுவதும் இரத்தம். வலது கால் பெரு விரலில் இப்படி ஒரு காயம் ஏற்பட்டால் உங்களுக்குப் பெரிய ஆபத்து வரப்போகிறது என்பதற்கு அடையாளம் என்று யாரோ ஒருவர் என்னிடம் கூறினார். அப்படி என்ன ஆபத்து வரப் போகிறது? என்று நினைத்துக் கொண்டேன்.

நான் வீட்டில் இருக்கிறேன். ராணிப்பேட்டையில் கலைஞர் வேன் கொளுத்தப்பட்டது. சால்வைகள் அனைத்தும் கொளுத்தப்பட்டன. வைகோ பார்க்கவே வரவில்லை என்பது என் மீது வைக்கப்பட்ட குற்றச் சாட்டுகளில் இது முக்கியக் குற்றச்சாட்டு.

பழனி தொகுதிக்கு நான் சென்றபோது எந்த மேடை யிலும் என்னை பேச விடவில்லையே? ஆனால் அவர் அப்படிக் கூறியிருந்தார்.

வீராண்டி ஆறுமுகம் என்னைப் பார்க்க வந்து, “என்னப்பா நீ அறிவாலயத்திற்கே வரவில்லை?” என்றார். ”நீங்கள் ஏற்பாடு செய்ததானே சுப்புலட்சுமி ஜெகதீசனை ஆதரித்து பத்துக்கூட்டம் பேசினேன். மறுநாள் எனக்கு தொண்டையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட சம்பவங்களை எல்லாம் வீராண்டி ஆறுமுகத்திடம் கூறினேன். கலைஞர் துரைமுருகனை அழைத்து, அவனுக்கு புற்று நோய் வந்துவிட்டது. அதிக நாள் இருக்க மாட்டான். இறந்துபோய்விடுவான் என்று கூறியிருக்கிறார்.

வேலூரிலிருந்து கட்சியில் வந்து சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சச்சிதானந்தமும், மஜித்தும் என்னை வந்து பார்த்து, சாகப்போகிறவன் கூட எதக்கய்யா போகிறீர்கள்? அவன் இன்னும் ஐந்தாறு மாதம்தான் இருப்பான். அவனுக்கு தொண்டையில் புற்று நோய் இருக்கிறது என்று துரைமுருகன் கூறுகிறார் என்றார்கள். அதெல்லாம் ஒன்றும் இல்லை. துரைமுருகன் கூறுவதை முழுமையாக நம்பாதீர்கள் என்று மஜித், சச்சிதானந்தம் ஆகியோரிடம் கூறினேன்.

மறுநாளுக்கு மறுநாள் கலைஞரை வழியனுப்பி வைக்க தென்னரகவுடன் போகும்போது, நான் குடும்பத்துடன் கொடைக்கானல் போகிறேன் அண்ணே என்று கூறினேன். போய்விட்டு வாருங்கள் என்றார். இதுதான் நடந்தது.

அதன் பிறகு என் மீது கொலைப்பழி. வைகோவின் அரசியல் உயர்வுக்காக விடுதலைப் புலிகள் கலைஞரைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்று ஊர்ஜிதம் ஆகாத ஒரு செய்தி வந்திருக்கிறது என்று உளவுத் துறையில் ஒரு டி.எஸ்.பி.யைப் பிடித்து இப்படி ஒரு ரிப்போர்ட்டை அவரை எழுத வைத்து, இந்தச் செய்தியை மத்திய அரசின் உள்துறைக்கு அனுப்பி, அவர்கள் அந்தச் செய்தியை முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பி, கருணாநிதிக்கு வேண்டிய பாதுகாப்பை நீங்கள் கொடுங்கள் என்று தெரிவித்திருந்தது.

பேராசிரியர் ஊரில் இல்லாத போது, மறுநாள் 1993 அக்டோபர் 3 ஆம் தேதி கலைஞர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டி, இந்தக் கடிதத்தை பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கலைஞர் கொடுத்துவிட்டார்.

உங்கள் மீது உயிராக இருக்கிறாரே! உங்களை ஏன் அவர் கொலை செய்யத் திட்டமிடப் போகிறார்? என்று ஒரு செய்தியாளர் கேட்கிறார். உடனே மாறன், என்ன கேட்கிறீர்கள்? அந்த அறிவிப்பிலேயே அவன் அரசியல் லாபத்துக்காக தலைவரை புலிகள் கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்று. எதற்கு தேவையில்லாத கேள்வி கேட்கிறாய்? என்றார்.

உடனே பத்திரிகையாளர்கள் எல்லாம் வாசலைப் பார்த்துச் செல்கிறார்கள். எல்லோரும் திரும்பி வாருங்கள் என்று கலைஞர் அழைத்து, நீங்கள் கேட்டதையோ? மாறன் கூறியதையோ ஒரு பத்திரிகையில்கூட நீங்கள் போடக் கூடாது என்று கூறிவிட்டார்.

ஆனால் தினகரன் ஐயா கே.பி.கந்தசாமி அவர்கள் வேலூர், சேலம், கோயம்புத்தூர் மூன்று மாவட்டத்தில் மாலை முரசுக்கு அவர் அதிபர். அந்த நிருபர்கள் கே.பி.கே. அவர்களிடம், நிருபர்கள் இப்படிக் கேட்டார்கள். கலைஞர் இப்படி பதில் சொன்னார். திரும்ப அழைத்து இதை எதிலும் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என சொல்லி விட்டார் என்று கூறினார்கள் என்றார்கள். அப்படியா, இதையே எட்டுக் காலச் செய்தியாக்குங்கள் என்று கூறிவிட்டாராம் ஐயா கே.பி.கே. அவர்கள். வேலூர், சேலம், கோயம்புத்தூர் மாலை முரசில் எட்டுக் காலச் செய்தி. மறுநாள் தினகரனில் எட்டுக் காலச் செய்தி.

இந்தச் செய்தி வந்தவுடன், தமிழ்நாடு முழுவதும் தி.மு.காரன் கொந்தளித்துவிட்டான். கலைஞருக்காக கொந்தளிக்கவில்லை. அநியாயமாக என் மீது கொலைப்பழி போட்டார்கள் என்று ஊருக்கு ஊர் போஸ்டர் ஒட்டினார்கள். ஊருக்கு ஊர் கொடும்பாவி எரித்தார்கள். இன்றைக்கும் திமுகவில் உள்ள பழைய கட்சிக்காரர்கள் 99 விழுக்காட்டினர் என் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று நின்றார்கள்.

அப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் நான் இருக்கும்போது வீராண்டி ஆறுமுகம் என் மீது உயிரையே வைத்திருப்பார். பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று வீராண்டி ஆறுமுகம் வீட்டில் நானும், எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரும் இருக்கும்போது, கலைஞரையும், பேராசிரியரையும் அங்கே வரவழைப்பது. நேருக்கு நேராக பார்க்க வைப்பது. என்னை வருத்தம் தெரிவிக்க வைப்பார்கள் என்று நான் ஊகித்துக் கொண்டேன்.

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோவை மாணிக்க வாசகம் இதய நோய் வந்து மருத்துவமனையில் இருக்கிறாராம். உடனே நான் அங்கு செல்ல வேண்டும் என்று வீராபாண்டி ஆறுமுகம் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக நான் சென்றுவிட்டேன். டாக்டர் தணிகாசலத்தை அழைத்துச் சென்றேன். அவருக்கு உடனடியாக ஆபத்து எதுவும் இல்லை. ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டார். இது ஏழாம் தேதி.

எட்டாம் தேதி குடவாசலில் கூட்டம். வீராபாண்டி ஆறுமுகம் அதை ரத்து செய்யச் சொன்னார். ரத்து செய்துவிட்டேன். ஏழாம் தேதி இரவு 10 மணிக்கு சாப்பிடலாம் என்று சாப்பாடு வைத்து தரையில் உட்கார்ந்து சாப்பிட்டேன். அப்படி அமர்ந்திருக்கும் போது கதவைத் தட்டினார்கள். யாரென்று பாரத்தால் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் இமையம் பாரதிராஜா, எடுத்த எடுப்பிலேயே நமக்கு அலுவலகத்திற்கு வீடு கொடுத்த கொடை வள்ளல் கலைப்புலி தாணு மூவரும் வந்து வாசலில் நிற்கிறார்கள்.

சாப்பாட்டு தட்டை எடுத்து வைத்துவிட்டு, வீட்டிற்குள் அழைத்துச் சென்று மூன்று நாற்காலியை எடுத்து வந்து அமரச் சொல்லிவிட்டு, படுக்கையில் நான் உட்கார்ந்துகொண்டேன். எதற்காக கோபமாக இருக்கிறீர்கள்? காலையில் வாருங்கள் கலைஞரைப் பார்த்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்றார்கள்.

நான் சொல்வதை கொஞ்சம் கேட்கிறீர்களா? கடந்த இரண்டரை மூன்று வருடங்களாக என்னை என்ன பாடு படுத்திவிட்டார்கள் என்று மூன்று மணி நேரம் நூறு சம்பவங்களைத் தொகுத்துக் கூறினேன். அவர்கள் இரவு பத்தரை மணிக்கு வந்தார்கள். இரண்டரை மணியைத் தாண்டிவிட்டது. அவர்கள் ஒன்றும் பேசவில்லை. கவிப்பேரரசர் வைரமுத்து, இந்த மூன்று மணி நேரமும் சத்தியத்தின் குரலைக் கேட்டோம் என்றார். நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று மூவரும் எழுந்து சென்றுவிட்டார்கள்.

காலை ஐந்தரை மணிக்கு மீண்டும் கதவு தட்டப்பட்டது. யார் என்று பார்த்தேன். பொன்.முத்துராமலிங்கம். விடியற்காலை 7 மணிக்கு உங்களை கலைஞரிடம் அழைத்துச் சென்று விட்டுவிட வேண்டும் என்று வீராபாண்டி ஆறுமுகம் முடிவெடுத்திருக்கிறார். நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது என்றார்.

நான் அந்த நேரமே வீட்டை விட்டுப் புறப்பட்டேன். என் துணைவியார் நான் மட்டும் வீட்டில் எப்படி தனியாக இருப்பேன் என்று அவரும் புறப்பட்டு வந்துவிட்டார். என் துணைவியாரின் தம்பி வீட்டிற்கு போய் அரை மணி நேரம்கூட ஆகாது. அந்த வீட்டு தொலைபேசியில், என்ன ராதாகிருஷ்ணன் உங்கள் மாமா அங்கே வந்திருக்கிறாரா? என்று கேட்டபோது, அவரைப் பார்த்து ஏழெட்டு மாதம் ஆகிவிட்டது. அவரைப் போய் பார்க்கவே இல்லை என்று அவர் கூறியவுடன், இல்லை, அவர் வந்திருக்கிறாரா? என்று கேட்டேன் என்று எதிர் முனையில் சொன்னார்.

சரி இந்த வீட்டிற்கு வந்து சோதனைக்கு வருவார்கள். என் துணைவியாரின் சகோதரி மகன் வாடகை வீட்டில் இருந்தான். அந்த வீட்டிற்கு நாங்கள் இருவரும் சென்றோம். பின்பு அடையாறில் உள்ள என் நண்பர் டால் நடராசன் வீட்டிற்குச் சென்றோம். அந்த வீட்டின் மாடியில் இருக்கிறோம். 15 ஆவது நிமிடம் துரைமுருகன் அங்கே வந்து, வைகோ இங்கே வந்தாரா என்று கேட்டார். டால் நடராசன் அவரைப் பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்று கூறிவிட்டார்கள்.

எனக்கு திரும்பவும் வருவார்கள் வேறு எங்காவது செல்வோம் என நினைத்தபோது, ஆயிரம்விளக்கில் பழைய மாடி வீடு ஒன்று இருக்கிறது. அங்கு வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். அங்கு மின் விளக்கு, மின் விசிறி எதுவும் கிடையாது. ஐந்தாறு மெழுகுவர்த்தியைக் கொண்டு வந்து பொருத்தி வைத்துவிட்டு, எங்கள் இருவருக்கும் இரண்டு பூரிக் கிழங்கு செட் வாங்கி வந்து கொடுத்தார். நானும், என் துணைவியாரும் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டுப் படுத்து விட்டோம்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்...)

திமுகவின் பொய்யும் அபாண்டமான குற்றச்சாட்டும் நிலை நிற்காது. மெய் தான் நிலைத்து நிற்கும் | சங்கொலி