வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

இறால் ஆலையில் அமோனியா கசிவால் தொழிலாளர்கள் உயிரிழப்பு! விசாரணைக் குழு பரிந்துரையை செயல்படுத்துக

இறால் ஆலையில் அமோனியா கசிவால் தொழிலாளர்கள் உயிரிழப்பு! விசாரணைக் குழு பரிந்துரையை செயல்படுத்துக

பெரியபாளையம் இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவால் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவத்துக்கு காரணமான அலட்சியத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு சிறந்த சிகிச்சையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வாய், மூக்கிலிருந்து ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அருகிலுள்ள சில மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது.

வைகோ அறிக்கை இந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் இவற்றையெல்லாம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொது நல அமைப்பினர் பலமுறை அரசுக்கு வேண்டுகோள் விட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும், ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தாலும் தொழிலாளர்கள் உயிர் பலியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் பொதுச் சுகாதாரக் கூடுதல் இயக்குநர் ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழுவை அமைத்து 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும், 3 நாள்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கிறார்.

விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து தகுந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு சட்ட பூர்வ நட்ட ஈடு தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து, அவர்களது உயிரைக் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 22.06.2026 அன்று விடுத்துள்ள அறிக்கை.

இறால் ஆலையில் அமோனியா கசிவால் தொழிலாளர்கள் உயிரிழப்பு! விசாரணைக் குழு பரிந்துரையை செயல்படுத்துக | சங்கொலி