வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் துரை வைகோ எம்.பி., மலர்ப்போர்வை அணிவித்தார்

காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் துரை வைகோ எம்.பி., மலர்ப்போர்வை அணிவித்தார்

காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் 131வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் துரை வைகோ எம்.பி. மலர்ப் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதச்சார்பற்ற இந்தியா என்ற அவரது இலட்சியத்தை உறுதிப்படுத்தும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நான் அல்லாஹ் என்று சொல்வதற்கு முன்பாக அம்மா என்றழைத்த அன்னைத் தமிழே ஆட்சி மொழியாக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த, மதச்சார்பற்ற இந்தியா இன்றும் என்றும் தொடர வேண்டும் என்று கனவு கண்ட கண்ணியத் தமிழர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்த நாளான 05.06.2026 அன்று திருவல்லிக்கேணி வாலாஜா பெரியபள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் போர்வை போர்த்தி துரை வைகோ எம்.பி., மரியாதை செலுத்தினார். அவரது பெயரில் ஃபாத்திஹா ஓதி பிரார்த்தனை செய்யப்பட்டது.

அவரது நினைவிடத்தில் நின்று காயிதே மில்லத் அவர்களின் "இந்தியா மதச்சார்பற்ற நாடாக என்றென்றும் தொடர வேண்டும்" என்ற உணர்வை உள்வாங்கி துரை வைகோ எம்.பி., உறுதியேற்றுக் கொண்டார்.

துணைப் பொதுச்செயலாளர் சு.ஜீவன் எம்.சி., மாவட்டக் கழகச் செயலாளர்கள் டி.சி.இராஜேந்திரன், நெமிலிச்சேரி மு.பாபு, வழக்கறிஞர் சைதை ப.சுப்புரமணி எம்.சி., லயன் மாவை மகேந்திரன், தீர்மானக்குழு செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெ.சிக்கந்தர், பகுதி கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், சிறுபான்மை பிரிவு தோழர்கள் மற்றும் கழக தொண்டர்கள் உடன் கலந்து கொண்டனர்.

காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் துரை வைகோ எம்.பி., மலர்ப்போர்வை அணிவித்தார் | சங்கொலி