வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

நெடுங்கடல் தாண்டிய நெருப்பு மாமலை!

நெடுங்கடல் தாண்டிய நெருப்பு மாமலை!

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய இந்தக் கவிதை, தமிழர் உரிமைக்காக அஞ்சாமல் போராடிய வைகோவின் துணிச்சலையும் தியாக உணர்வையும் போற்றுகிறது. ஈழத் தமிழர்களின் துயரை உலகறியச் செய்யும் வகையில் ஆபத்துகளைக் கடந்து அவர்களுடன் நின்ற தலைவராக வைகோவை சித்தரிக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அவர் கொண்டிருந்த உறவு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீதான அவரது உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை வீரமும் உணர்ச்சியும் நிறைந்த மொழியில் இந்தக் கவிதை வெளிப்படுத்துகிறது.

கொடியில் புலி உடையான் கரிகாலன்

குமுறி அந்நாளில் நிமிர்ந்த கடலில்

இடிநேர் காவலன் சுந்தரபாண்டியன்

எகிறிப் படை கொண்டெழுந்த பேராழியில்

அடிமையர் துயர் தீர்க்கப் பிறந்தவன்

ஆற்றலன் வைகோ சீற்றமுற் றெழுந்தான்!

ஈழத் தமிழனைச் சிங்கள வெறியன்

எகிறி மிதிக்க இவன் நெருப்பானான்!

ஆழக்கடலை உதைத்து நிமிர்ந்தான்!

ஆயிரம் புயல் ஆகி வெடித்தான்!

நீளக் கிடந்த கடல்நீர் கடந்தான்!

நிமிர்ந்த தடந்தோளன் தமிழ் நெஞ்சன்

வேழத் தலைவன் வைகோ விடுதலை

வேங்கைகள் ஈழ மீது கால் வைத்தான்!

சுற்றிலும் நின்றது சிங்களவர்படை!

சூழ வளைத்தது பாரதப் போர்ப்படை!

பற்றி எரியும் தீப்பிழம் பாகிப்

பக்கத் திருந்தது தமிழர் புலிப்படை!

நற்றமிழ் ஈழத் தமிழர் நிலத்தில்

நாயகன் வைகோ தீயென நின்றான்!

முடியுடை வேந்தன் கரிகாலன் படை

முன்னர் வெறிகொண் டெழுந்த முந்நீரில்

பொங்கி அதிர்ந்து வெடித்த கடலில்

போர் முரசார்த்த பேரலை ஓர்பால்

கங்கு கரைகள் உடைத்து நள்ளிரவில்

கடலை உதைத்த வெம்புயல் ஓர்பால்

சிங்களர் கொடும் கடற்படைக் கப்பல்

சினம் கொண்டுலாவும் அதிர்வொலி ஓர்பால்

இங்கிவை நடுவில் புலிகள் படகில்

இருந்தான் வீரன் எரிமலை வைகோ!

உற்றனர் ஈழத் தமிழர் பேருவகை!

உறுமி வெடித்தது விடுதலை முரசே!

உலகவிடுதலை யாளன் உலைநெஞ்சன்

ஒப்பிலான் பிரபாகரன் கண்களில்

அலை கொண்டெழுந்தது பேரொளி! செந்தமிழ்

அன்னை நாடாம் தமிழ்நாட்டின் வேங்கை

நிலமகள் பெற்ற நெருப்புமகன் வைகோ

நேர்வரப் பிரபாகரன் நெகிழ்வுற்றனன்!

மலையும் அருவியுமாய் அவர் ஆயினார்!

மண்ணின் திசைநாலும் சங்கொலி ஆர்த்ததே!

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
நெடுங்கடல் தாண்டிய நெருப்பு மாமலை! | சங்கொலி