வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் - துரை வைகோ எம்.பி., சந்திப்பு

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் - துரை வைகோ எம்.பி., சந்திப்பு

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை சந்தித்த துரை வைகோ எம்.பி., திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி போக்குவரத்துக் கோட்டம் அமைக்கவும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் போக்குவரத்து தொழிற்சங்கத்திற்கு கோட்ட அலுவலகங்களில் அலுவலக வசதி ஒதுக்கவும் கோரிக்கை வைத்தார். அமைச்சர் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

22.06.2026 அன்று மாலை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை சந்தித்து, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி போக்குவரத்துக் கோட்டம் உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கை மனுவை வழங்கி, அதன் அவசியத்தை துரை வைகோ எம்.பி., விரிவாக எடுத்துரைத்தார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாவட்டம் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரட்டுக் கழகத்தின் (TNSTC) கும்பகோணம் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய வணிக மையமாகவும், கல்வி, தொழில், சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் தலமாகவும் வளர்ந்து வரும் திருச்சி மாநகரின் மக்கள் தொகை தற்போது 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இதனால் பொதுப் போக்குவரத்தின் தேவை நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்றும், தமிழ்நாட்டில் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் தனிப்போக்குவரத்துக் கோட்டத் தலைமையிடம் இல்லாத ஒரே நகரம் திருச்சி மட்டுமே. இதன் காரணமாகப் புதிய பேருந்து வழித்தடங்கள் உருவாக்கம், பேருந்துகள் ஒதுக்கீடு, வாகன மேலாண்மை மற்றும் சேவை விரிவாக்கம் உள்ளிட்ட நிர்வாக முடிவுகளில் கணிசமான தாமதங்கள் ஏற்பட்டு வருவதையும் துரை வைகோ எம்.பி., சுட்டிக்காட்டினார்.

இக்கோரிக்கையை கடந்த ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ். எஸ். சிவசங்கர் அவர்களுக்கு 08.10.2025 அன்று சமர்ப்பித்திருந்ததையும், தற்போது 04.06.2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்து விளக்கியதையும் தெரிவித்தார். நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் இம்முக்கிய கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்து, தேவையான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தினார்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான இந்த அரசு, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனிப் போக்குவரத்துக் கோட்டத்தை கும்பகோணம் கோட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கித் தரும் என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்து துரை வைகோ எம்.பி., விடைபெற்றார். அமைச்சர் அவர்களும் கோரிக்கையின் அவசியத்தை புரிந்துகொண்டு உடன் பரிசீலித்து நல்ல முடிவை எட்டுவதாக உறுதியளித்தார்.

மேலும், இன்னொரு கோரிக்கையாக, மறுமலர்ச்சி திமுகவின் தொழிற்சங்கமான, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் (MLF) இணைப்புச் சங்கமான, போக்குவரத்து தொழிற்சங்கத்திற்கு அனைத்து கோட்ட மைய அலுவலகங்களில் சங்கப் பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்து தருமாறு கோரிக்கை கடிதம் வழங்கி கேட்டுக்கொண்டார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் - துரை வைகோ எம்.பி., சந்திப்பு | சங்கொலி