திருச்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜன் பன்னீர்செல்வம் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 06.06.2026 அன்று துரை வைகோ எம்.பி., நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். அவருடன் அவரது மகன் ராஜதர்மா மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு ஆகியோர் உடன் இருந்தனர்.

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்
திருவனந்தபுரம் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மையத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் 29.07.2026 அன்று நடைபெற்றது.
மேலும் படிக்க »





