1857 ஆம் ஆண்டு மீரட் சிப்பாய் கலகமல்ல
அதற்கும் முன்னர் 1806 ஆம் ஆண்டு
வேலூரில் வெடித்த சிப்பாய் கலகமே ஆங்கிலேய
அடிமைத் தனத்தில் இருந்து விடுபடுவதற்கான
எமது முதற்களம். பூலித்தேவன், வீரபாண்டிய
கட்டபொம்மன், வேலுநாச்சியார்,
மருதிருவர்
போன்ற பாளையக்காரர் 18-ம் நூற்றாண்டுக்கான
விடுதலைப் போராளிகள். நானா சாஹேப், பேசும்
ஹஸ்ரத், ஜான்சி ராணி லட்சுமி பாய் ஆகியோரின்
சமர்க்களங்கள், சுபாஷ் சந்திர போஸின் இந்திய
தேசியப் படையின் எழுச்சி மற்றும் காந்தியாரின்
அகிம்சைக் களங்கள் வரிசையில் பரங்கியனை
நிலை குலையச் செய்த பகத் சிங்கின் செம்புரட்சிச்
சமருக்கு இணையான பதற்றத்தை ஏற்படுத்தியது
'வெள்ளையனே வெளியேறு' போராட்டம். நாஸிய
இட்லரின் ஆதிக்க பேரினவாத மனப்பான்மையின்
விளைவான இரண்டாம் உலகப் போரின் நிழலில்
ஆதிக்கச் சக்திகளின் அடக்குமுறைக்கு எதிரான
மனித குல மனப்போக்கு ஒரு புறம் தலைதூக்கி நிற்க
விடுதலையுணர்வு சமத்துவநோக்கு நாட்டுப்பற்று
ஆகியவற்றின் அடிப்படையில் விடுதலைத் தீயைப்
பரப்பி மக்களை எதேச்சதிகாரத்துக்கு எதிராகத்
திரட்டி களம் அமைத்ததில் ஏடுகளின் பங்களிப்பு
அலாதி.
1942 ஆம் ஆண்டு தொடங்கிய 'வெள்ளையனே
வெளியேறு களத்துக்கு மக்கள் திரளை
ஒன்றிணைக்கும் பெருங்கலனாய் விளங்கிய
'நேசனல் ஹெரால்டு' ஏடு அரசால் முடக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு ஈழவிடுதலைப் போரின் இறுதி
நாட்களில் சிங்களப் பேரினவாதம் ஈழத்தமிழர் மீது
கட்டவிழ்த்த இனப்படுகொலைக் கொடூரத் தாக்கு
தலைக் கண்டித்து தலையங்கம் வரைந்த இலங்கை
சண்டே லீடர் ஏட்டின் முதன்மை ஆசிரியர் லசிந்த
விக்கிரமதுங்க சிங்களப் பேரினவாத அரசால் சுட்டுக்
கொல்லப்பட்டார். நரேந்திர தபோல்கர் கோவிந்த்
பன்சாரே பேராசிரியர் கல்புர்கி, கௌரி லங்கேஷ்
உள்ளிட்ட எழுத்தாளர்களின் கொலை இந்துத்துவ
பாசிசத்தின் மீது படர்ந்துள்ள இரத்தக்கறை.
ஜனநாயகத்தின் நான்காம் தூண் ஊடகம். அதன்
அத்திவாரம் அச்சு ஊடகம். நிகழ் காலத்தைப் பிரதி
பலிக்கும் அச்சு ஊடகத்தின் பிரதான அங்கமான
ஏடுகளுக்கு சவால்களை எதிர்கொள்ளும்
பேராற்றலும் அறமிழந்து நின்ற கொடூரமான
ஆதிக்கச் சக்திகளைத் தோலுரித்து நிர்மூலமாக்கிய
வரலாறும் ஏடுகளுக்கு ஏராளம் உண்டு. கியூபப்
புரட்சியாளர் பிடெல் காஸ்ட்ரோவுக்கு
"கிரான்மா" ஒரு
தென்னாப்பிரிக்காவில் நிலவிய
நிறவெறிக்கு எதிரான நெல்சன் மண்டேலாவின்
இயக்கம் உயர்த்திய "இங்கபா-யா-பேஸ்பென்சி"
(தொழிலாளர் கோட்டை) மற்றும் "செஷபா" எனும்
விடுதலைப் பரப்புரைக் கலன்கள் வரலாற்றுச் சிறப்பு
வாய்ந்தவை. 1917 ஆம் ஆண்டு ருசியாவில் பொல்
ஷெவிக் புரட்சியை வென்றெடுத்த லெனினுக்கு
முதற்பெரும் தோழனாய் போர்க்கலனாய் விளங்
கியது அவர் கண்டெடுத்த "ப்ராவ்தா" ஏடு. அதே
காலகட்டத்தில் ஒரு முழு தேசிய இனத்தையே
சமூகநீதி குடைக்குள் கட்டமைத்து சீர்தூக்கி
சமத்துவத்தை நிலைநாட்டிய வரலாறு எமது
"ஜஸ்டீஸ்" ஏட்டுக்கு உண்டு. சி.நடேசனார், டி.எம்.
நாயர், பிட்டி தியாகராயர் ஆகியோர் மனு(அ)
நீதியின் அடிப்படையிலான இரண்டாயிரம் ஆண்டு
கால அடிமைச் சங்கிலியைத் தகர்க்கும் நோக்கில்
1916 நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் தொடங்கிய
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் பின்னர் "ஜஸ்டிஸ்"
எனும் அதன் ஏட்டின் அடையாளத்துடன் நீதிக்கட்சி
எனும் பெயர் பெற்றது. "ஜஸ்டிஸ்" ஏடு ஏற்படுத்திய
தாக்கம் அது - சிறப்புக்குரியது.
1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்க நிறுவனத்
தலைவர், 1938 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின்
தலைவர், 1973 ஆண்டு இறுதியில் தமது 94 - ஆம் அகவையில்
திராவிடர் கழகத்தின் தலைவராக மரணிக்கும் வரை சமூகப்
புரட்சிக்காகக் களமாடிய தந்தை பெரியாரின் பாதையை
வழிவகுத்தது சமூகநீதிக் கோட்பாடு எனில் அதை வரலாறாய்
நமக்கு தொகுத்தளித்தது குடியரசு, புரட்சி, பகுத்தறிவு,
விடுதலை, உண்மை மற்றும் ஆங்கிலத்தில் ரிவோல்ட், தி
மார்டன் ரேசனலிஸ்ட் என அவரால் தொடங்கப்பட்ட ஏடுகள்
இதழ்கள். "திராவிடர் கழகம்" என நீதிக் கட்சிக்கான பெயரை
முன்மொழிந்தவரும், பின்னர் 1969 ஆம் ஆண்டு மெட்ராஸ்
மாகாணத்துக்கு அதன் முதல்வராக "தமிழ்நாடு" எனப் பெயர்
சூட்டிய வருமான அறிஞர் அண்ணா கண்ட ஏடு "திராவிட நாடு".
கலைஞரின் மூச்சுக் காற்றாய் முரசொலி.
அரசியலில் நேர்மை -பொதுவாழ்வில் தூய்மை - லட்சியத்தில்
உறுதி எனும் அடிப்படை அறத்துடன் எழுந்த மறுமலர்ச்சி
எமது திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர் திராவிட
இயக்கப் போர்வாள் தலைவர் வைகோ அவர்கள் எழுப்பிய
முழவொலி - சங்கொலி, சங்கொலி அகவை முப்பதை நிறைவு
செய்கிறது. முப்பது ஆண்டுகள் எனில் ஒரு முழு தலைமுறை.
ஒரு தலைமுறைக்கு திராவிடக் கோட்பாட்டை அறவியலாய்
தீட்டி வார்ப்பித்து சிறக்கிறது சங்கொலி தமிழின உரிமைக் குரல்
தலைவர் வைகோ அதன் ஆசிரியர் என்பதாம் அதன் முதற் சிறப்பு.
"எழுத்து எனும் கருவறை" -யில் பிறப்பெடுக்கக் கூடிய உணர்வுகள்
அடக்குமுறைகளை உடைப்பதற்கு பூட்டப்பட்ட விலங்குகளைத்
தகர்ப்பதற்கு எரிமலையாக வெடிக்கின்றன. சுதந்திரமாய்
பிறக்கும் மனிதன் விலங்குகளால் பூட்டப்படுகின்றான். இந்த
விலங்குகளை உடைக்கும் சம்மட்டிதான் எழுத்து எனும்
சம்மட்டி. இந்த கருவறையில் வார்ப்பிக்கப்பட்ட ஆயுதங்கள்,
சர்வாதிகாரிகளின் கோட்டை கொத்தளங்களைத் தகர்த்துத்
தரைமட்டமாக்கி இருக்கின்றன" என 2010 ஆம் ஆண்டு ஈரோடு
புத்தகத் திருவிழாவில் தலைவர் வைகோ அவர்கள் எழுப்பிய
முழக்கம் எழுத்தின் வல்லமையை இயம்பியதைப் போலவே
சங்கொலியில் அச்சில் ஏறும் எழுத்துகள் ஒவ்வொன்றும் திராவிட
இயக்கத்தின் மறுமலர்ச்சியை, தமிழினத்தின் விடுதலையை,
ஒடுக்கப்பட்டோரின் உரிமையை வாழ்வியல் மேம்பாட்டை உறுதி
செய்யும் முனைப்புக் காட்டுகின்றன.
நாடாளுமன்ற அவைகளில் தலைவர் வைகோ அவர்தம்
உரிமை முழக்கங்கள் உறுமல்கள் அவருக்கு 'நாடாளுமன்றப்
புலி' எனும் சிறப்பைப் பெற்றுத் தந்ததெனில் சங்கொலியின் அவரின்
எழுத்துகள் சமூக வாழ்வியல் புரட்சி முழக்கங்களை எழுப்பி வருகின்றன.
ஆம்! நம்மால் முடியும், குற்றம் சாட்டுகிறேன், வெற்றிச் சங்கொலி,
வைகோவின் சங்கநாதம், புயலின் முகங்கள், தமிழரின் போர் வாள்,
இரத்தம் கசியும் இதயத்தின் குரல், இந்தியை எதிர்க்கிறோமே ஏன்,
தமிழ் ஈழம் ஏன், தமிழர் வாழ்வில் தந்தை பெரியார், தடைகளைத்
தகர்ப்போம்! தாயகம் காப்போம்!! என்று தணியும் இந்தச் சுதந்திரத்
தாகம்? மறுமலர்ச்சி பெற - எழுச்சி நடை, யமுனைக் கரையில், பரணிக்
கரையில், புரட்சிக் கனல் என்பன தலைவர் வைகோ அவர்களின்
சங்கொலியைக் கருவறையாகக் கொண்டு பூத்து உயிர்த்த செங்காந்தள்
மலர்கள் விடுதலை வேள்விப் பிழம்புகள் சில.
ஈழ வேங்கைகளை முக்காலத்தும் ஆதரிப்பேன்" என மக்கள் மன்றம்
ஆளும் மன்றம் அறமன்றம் என மும்மன்றங்களிலும் முழங்கிய
தலைவர் வைகோ வேங்கையர் மீதான நேசத்திற்காக பொடா சிறைவாசம்
பூண்டிருந்த பத்தொன்பது திங்கள் சங்கொலியில் தம் தொண்டர்களுக்கு
வரைந்த கடிதங்களின் தொகுப்பே "சிறையில் விரிந்த மடல்கள்".
அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்
களுடனான தமது சந்திப்பின் போது முதல்வருக்கு இந்த நூலைதான்
வழங்கி சிறப்பித்தார் தலைவர் வைகோ.
"ஆதாயம் இல்லா மக்கள் பணி! சமரசம் இல்லா மக்கள் நலன்!!" எனும்
தாரக மந்திரத்தின் அடிப்படையிலான கழகத்தின் முதன்மைச் செயலாளர்
திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ அவர்களின்
களப்பணிகளை மக்களிடம் கொண்டு செல்லும் எதிரொலி சங்கொலி.
திராவிட வரலாற்றுச் சிறப்புமிக்க பேரேடாம் சங்கொலியில் எம்மைப்
போன்றோரின் எழுத்துகளும் இடம்பெறும் விதமாக தலைவர்
வைகோ அவர்கள் அளித்துவரும் அங்கிகாரமும் அரவணைப்பும்
எமக்கான பெரும் பேறு. சிறக்கட்டும் சங்கொலி! தொடரட்டும் அதன்
பணி, தலைவர் வைகோ அவர்தம் தடமது தொடர்வோம்!
திராவிடமும் தமிழினமும் பேணுதல் புரிவோம்!!







