வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

திருச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார்

திருச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ரூ.1 கோடியே 56 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக் கடைகள், பேருந்து நிழற்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார். அமைச்சர் ரமேஷ் அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மக்களின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமல்ல, அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் மக்கள் நலப் பணிகளும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் அரசியலின் உண்மையான வெற்றியாகக் கருதும் துரை வைகோ எம்.பி. அவர்கள், 12.06.2026 அன்று திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், 2025-2026 ஆம் ஆண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதி (MPLADS) மொத்தம் ரூ.1 கோடியே 56 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலும், தலைவர் வைகோ அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர் நிதி ரூ.29 இலட்சம் மதிப்பிலும் கட்டப்பட்ட பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்தார்.

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜீயபுரம் மற்றும் அம்மன்குடி ஆகிய இரு சட்டமன்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சீ.ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

காலை 8:30 மணிக்கு, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி 54வது வார்டு வேடுவர் தெருவில் ரூ.17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். தொடர்ந்து காலை 9 மணியளவில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, 20வது வார்டு பூலோகநாதர் கோவில் தெருவில் ரூ.17 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார்.

நாள் முழுவதும் — சஞ்சீவி நகர் பகுதியில் நியாய விலைக் கடை, திருவெறும்பூர் தொகுதி எழில்நகரில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குண்டூர் ஊராட்சியில் ரூ.17.80 இலட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம், ஜீயபுரத்தில் ரூ.8 இலட்சம் மதிப்பில் பேருந்து நிழற்கூடம், அந்தநல்லூர் ஒன்றியம் அம்மன்குடியில் ரூ.10.60 இலட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை, மணிகண்டம் ஒன்றியத்தில் சோமரசன்பேட்டையில் ரூ.2.25 இலட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு, நாச்சிக்குறிச்சி ஊராட்சியில் இனியாநுாரில் ரூ.29 இலட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பாகனூர் ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம், மணப்பாறை ஒன்றியம் கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பில் சீரணி அரங்கம் — என ஒவ்வொன்றாக திறந்து வைத்தார்.

குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்கான அங்கன்வாடி மையங்கள், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகுப்பறை கட்டடங்கள், கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கத் தொட்டிகள், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான நியாயவிலைக் கடைகள், சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் ஆழ்குழாய் திட்டங்கள் என ஒவ்வொரு திட்டமும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டிருப்பதை நேரில் கண்டு துரை வைகோ எம்.பி. மகிழ்ச்சி அடைந்தார்.

"மக்களின் தேவைகளை உணர்ந்து, தொகுதி முழுவதும் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதில் மனம் நிறைவடைவதாகவும்; இன்னும் தொடர்வேன்" என்றும் துரை வைகோ எம்.பி. கூறினார்.

திருச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார் | சங்கொலி