வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்

டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்

டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். கூட்டணி ஒற்றுமை, எஸ்.ஐ.ஆர். விவகாரம், கல்வி, விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் 08.06.2026 அன்று டெல்லியில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய இக்கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள 23 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

கருத்துவேறுபாடுகளுக்கு இடம் அளிக்காமல் ஒற்றைப்படை வீரனைப் போல ஒட்டுமொத்தமாக அனைவரும் இணைந்து செயல்படுவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

எஸ்.ஐ.ஆர்., விவகார குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கு தாக்கல் செய்வது என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிய ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்றும், இந்தியா கூட்டணி கூட்டத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்துவது என்றும், இதன் அடுத்த கூட்டத்தை ஆகஸ்ட் 8 அன்று ஐதராபாத்தில் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டணிக் கட்சிகளின் பெரும்பாலான தலைவர்கள் நேரிலும், ஆன்லைன் வாயிலாகவும் பங்கேற்ற இக்கூட்டம் தனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது என்றும், முரண்பாடுகள் இன்றி ஒத்த கருத்துள்ளவர்களாக அனைவரும் திகழ்வதில் பெருமை கொள்வதாகவும் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டம் நிறைவுபெற்ற பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார் | சங்கொலி