வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

துரை வைகோ எம்.பி., தொடர் முயற்சிக்கு வெற்றி! யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது!

துரை வைகோ எம்.பி., தொடர் முயற்சிக்கு வெற்றி! யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது!

துரை வைகோ தொடர் முயற்சியால், யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது.

யேமன் நாட்டு நிறுவன எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த திரு. ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் 08.03.2026 அன்று, கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையான பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக யேமனின் ஹொதெய்தா நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர முயற்சிகளுக்கும் பிறகு அவர் 03.04.2026 அன்று உயிரிழந்தார்.

அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக 12.04.2026 அன்று ரியாத்திலுள்ள இந்திய தூதரகம் தடையில்லா சான்று (NOC) வழங்கியுள்ளது. பின்னர், அவரது உடல் விமான மற்றும் போக்குவரத்து வசதிகளின் பற்றாக்குறை மற்றும் சில நிர்வாக சிக்கல்களால் தாய்நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கை தாமதமாகியுள்ளது.

இந்நிலையில், அவரது உடல் இந்தியா வந்து சேரும் தேதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை என என்னிடம் தெரிவித்து, மிகுந்த மனவேதனை மற்றும் துயரத்தில் அவரது உடலை கொண்டுவர முறையிட்டனர்.

இந்த தகவலை மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு 04.05.2026 அன்று கடிதம் எழுதி, சம்பந்தப்பட்ட இந்திய தூதரகம் மற்றும் அதிகாரிகளுடன் உடனடி ஒருங்கிணைப்பை மேற்கொண்டு, மறைந்த திரு. ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் அவர்களின் உடலை மிக விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அதன் அடிப்படையில் இன்று அவரது உடல் யேமனிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுவிட்டதாக தகவல் பெற்றேன். இன்றே கேரளம் வழியாக அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு அவரது உடல் அனுப்படவுள்ளதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 12.05.2026

துரை வைகோ எம்.பி., தொடர் முயற்சிக்கு வெற்றி! யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது! | சங்கொலி