கழக சட்டதிட்ட விதிகளில் திருத்தம்

மறுமலர்ச்சி தி.மு.க. சட்டத் திட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தலைமை நிர்வாகக் குழு மற்றும் உயர்நிலைக் குழுவின் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டதுடன், தலைமைக் கழகச் செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆகிய புதிய பொறுப்புகளின் அதிகாரங்களும் பணிகளும் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், உறுப்பினர் சேர்க்கை, அமைப்புத் தேர்தல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பு தொடர்பான பொறுப்புகள் அமைப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளன.
- விதி - 24 தலைமை நிர்வாகக் குழு என்ற விதி கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது. பிரிவு - 1: அவைத்தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர், அமைப்புச் செயலாளர், மற்றும் கழக அணிச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாநகர் மாவட்டச் செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், தணிக்கைக் குழு உறுப்பினர்கள், தீர்மானக் குழு உறுப்பினர்கள், சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள், சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினர்கள், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பேரவையின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் சட்டமன்றப் பேரவை, நாடாளுமன்ற மக்களவை- மாநிலங்களவை ஆகியவற்றின் மறுமலர்ச்சி தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் பொதுச்செயலாளரால் நியமனம் செய்யப்படுகின்ற துணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோரைக் கொண்டது தலைமை நிர்வாகக் குழு ஆகும். 2) விதி 25 தலைமை நிலையம் என்பதில், பிரிவு 3 சேர்க்கப்படுகிறது. பிரிவு 3, தலைமைக் கழகச் செயலாளர்: கழகப் பொதுச்செயலாளரால் நியமனம் செய்யப்படும் தலைமைக் கழகச் செயலாளர் தலைமைக் கழக அலுவலகப் பணிகளையும், பொதுச்செயலாளர் மேற்கொள்ளும் பணிகளுக்குத் துணையாகவும் செயல்படுவார். 3) விதி 28, பிரிவு 2 - உயர்நிலைக் குழு என்பது கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது. பிரிவு 2 - உயர்நிலைக்குழு: அவைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழுச் செயலாளர், அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர், அரசியல் ஆய்வு மையச் செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் சார்பில் 2 பேர், கழக அணிகளின் சார்பில் 2 பேர் மற்றும் பொதுச்செயலாளரால் நியமிக்கப்படும் இருவரையும் கொண்டது உயர்நிலைக் குழு ஆகும். 4) விதி 29 - கழக அமைப்புத் தேர்தல் என்பதில் பிரிவு 20 சேர்க்கப்படுகிறது. பிரிவு - 20, அமைப்புச் செயலாளர்: கழகத்தின் அமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், தலைமைக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, அமைப்புத் தேர்தல்கள் தொடர்பான பணிகளை நிறைவேற்றவும், மாவட்டக் கழகங்களுடன் நிர்வாகப் பணிகளை ஒருங்கிணைக்கவும் அமைப்புச் செயலாளர் ஒருவரை கழகப் பொதுச்செயலாளர் நியமிப்பார்.
