வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

மேற்கு ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் எம்பி துரை வைகோ முயற்சியால் மீட்பு

மேற்கு ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் எம்பி துரை வைகோ முயற்சியால் மீட்பு

துரை வைகோ எம்.பி. தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக, மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஐந்து இந்தியர்களில் நான்கு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாடு திரும்பினர். மீட்புப் பணியில் ஈடுபட்ட வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்திற்கு அவர் நன்றி தெரிவித்ததுடன், உயிரிழந்த முத்துசாமி பெச்சிமுத்து அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த திரு. புதியவன் சுடலை, திரு. பொன்னுதுரை பாக்கியராஜ், திரு. பேச்சிமுத்து முத்துசாமி, திரு. ஈசக்கிராஜா மற்றும் திரு. தளபதி சுரேஷ் முருகேசன் ஆகிய ஐந்து இந்தியர்கள் வேலைவாய்ப்பிற்காக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டிற்கு சென்றிருந்த நிலையில், கடந்த 06.11.2025 அன்று அவர்கள் பணியாற்றிய இடத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினரால் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை அவசரமானதாகக் கருதி 19.11.2025 அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களிடம் நான் கோரிக்கை கடிதம் அளித்து, சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுத்து, கடத்தப்பட்ட இந்தியர்களை கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொண்டேன். இதன் தொடர்பாக 12.12.2025 அன்று மீண்டும் நினைவூட்டும் கடிதத்தையும் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.

அதன் தொடர்ச்சியாக வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் மாலியில் உள்ள இந்திய தூதரகம் எடுத்த முயற்சிகளின் விளைவாக, கடத்தப்பட்ட ஐந்து பேரில் நான்கு இந்தியர்கள் தீவிரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு 12.03.2026 அன்று இந்தியா திரும்பியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரதிருஷ்டவசமாக, கடத்தப்பட்டவர்களில் ஒருவரான திரு. முத்துசாமி பெச்சிமுத்து அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தபோது மலேரியா நோயால் 04.03.2026 அன்று உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் அங்கு இந்து சமய மரபுகளின்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து நான்கு இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முக்கிய பங்கு வகித்த வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், மாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் உயிரிழந்த திரு. முத்துசாமி பெச்சிமுத்து அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி, அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் துரை வைகோ திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் முதன்மைச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக 14.03.2026

மேற்கு ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் எம்பி துரை வைகோ முயற்சியால் மீட்பு | சங்கொலி