திங்கள், 13 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!

சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்!

சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 05.06.2026 அன்று நடைபெற்ற உண்ணாவிரத அறப்போர் தொடக்கத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ உரை

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 05.06.2026 அன்று நடைபெற்ற உண்ணாவிரத அறப்போர் தொடக்கத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ உரைஇதை நான் உம்மன்சாண்டியிடம் கூறியபோது, கேரள அரசின் தலைமைச் செயலாளரையும், பொதுப் பணித் துறை செயலாளரையும் அழைத்து, செண்பகவல்லி அணையை செப்பனிட்டுக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார். நமக்கு நல்ல நேரம் இல்லையோ? என்னவோ? இரண்டு மாதத்தில் அவரது ஆட்சி கவிழ்ந்துவிட்டது. அச்சுதானந்தன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி வந்துவிட்டது. கேரளா சென்று கொச்சியிலும், திருவனந்தபுரத்திலும் அவரைச் சென்று பார்த்தேன். அவர் மனம் இறங்கவில்லை. அவர் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கூட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர். அதன்பின்னர் பினராயி விஜயன் முதல்வரான பின்பு அவரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன். இதற்கு மத்தியில்தான் விவசாயிகளும், என் தம்பி ரவிச்சந்திரனும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார்கள். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படி தள்ளுபடி செய்யும்போது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்ன சொன்னார்கள் என்றால், நீங்கள் அதிகாரிகளை உரிய முறையில் அணுகுவதற்கு அனுமதி கொடுத்து இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறினார்கள். செண்பகவல்லி அணையை முழுவதுமாக கேரளா இடித்துவிட்டது. அந்த அணையை மீண்டும் கட்டுவதற்கு கேரள அரசு முன்வர வேண்டும். மத்திய அரசிடமும் கூறி, அவர்களையும் கேரள அரசுக்கு அழுத்தம் கொடுக்க வைக்கலாம். அந்த முயற்சியில் தமிழக அரசு ஈடுபடலாம். உள்ளாறு அணைக்கட்டுத் திட்டம், சிவகிரி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் வட்டாரத்தில் 30 ஆயிரம் ஏக்கருக்குப் பாசனம் கொடுப்பதால் அந்தத் திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசிடம், முதலமைச்சரிடம், பொதுப்பணித் துறை அமைச்சரிடம் கோரிக்கையாக விவசாயிகளை அழைத்துக் கொண்டு சென்று கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். கர்நாடக அரசு காவிரி தீரத்தில் மேகேதாட்டுவில் தடுப்பணை கட்டிவிட்டால் காவிரி டெல்டா பகுதி பஞ்சப் பிரதேசமாகும். தஞ்சை மண்டலத்தில் நஞ்சை நிலங்களையே பார்க்க முடியாது. மேகேதாட்டு அணையை எதிர்த்து 2013 இல் இருந்து நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அது மட்டுமல்ல, சோழ மண்டலத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று கட்சிக் கொடி கட்டாமல், என் வாகனத்திலும் கட்சிக் கொடி கட்டாமல் ஒவ்வொரு ஊர் மக்களையும் திரட்டி, உங்கள் எதிர்காலம் அழிந்து போய்விடும். மேட்டூரிலிருந்து இனிமேல் ஒரு சொட்டு தண்ணீர் வராது என்று எடுத்துக் கூறியபோது பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள். திமுக செயலாளர், அதிமுக செயலாளர் ஆகியோர் வந்து பொன்னாடை அணிவித்தார்கள். கம்யூனிஸ்டு, பா.ஜ.க., அரிமா சங்கம், விவசாய சங்கம், சுழற் கழகம் என அனைத்து அமைப்புகளும் என்னை வரவேற்றார்கள். காரணம் என்ன? அரசியல் பேசவில்லை. என் கட்சியின் பெயரைச் சொல்லவில்லை. ஓட்டுக் கேட்கவில்லை. நான் பொதுநலனுக்காகப் பாடுபடுகிறேன். சோழ மண்டலம் முழுவதும் சுற்றி வந்து ஆதரவு திரட்டி இருக்கிறேன். இப்பொழுதும் மேகேதாட்டுவில் அணை கட்டப்படுவதை எதிர்த்து சென்னையில் மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். கொளுத்துகின்ற நெருப்பு வெயிலில் மூன்று மணி நேரம் தோழர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அந்தப் போராட்டத்தை நடத்திவிட்டு இங்கே வந்திருக்கிறேன். இங்கிருந்து இன்றே சென்னை சென்று திருவள்ளுவர் படத்திற்கு காவி ஆடை அணிவித்து, திருவள்ளுவரை சனாதனி என்று கூறிய ஆளுநர் அர்லேக்கரைக் கண்டித்து நாளை மறுநாள் ஜூன் 7 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை பனகல் மாளிகை அருகே இருந்து கருப்புக் கொடிகளுடன் புறப்பட்டு, ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை நடத்த இருக்கிறேன். தொடர்ந்து போராடுவதுதான் என் வேலை, ஆயுதப் போராட்டம் அல்ல, வன்முறை போராட்டம் அல்ல, அறவழிப் போராட்டம். மக்களைத் திரட்டும் போராட்டம். விவசாயிகளைத் திரட்டும் போராட்டம். நான் வாழ்கிற காலத்தில் நான் நடத்திய போராட்டங்களின் பெருமையை யாரும் உணர மாட்டார்கள். ஆனால் என் காலத்திற்குப் பிறகு வரலாற்றை முறையாகப் படித்தால் தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு சாதாரண கலிங்கப்பட்டி கிராமத்தில் பிறந்த வைகோ இவ்வளவு போராட்டங்களை நடத்தி, நீதியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். முல்லைப் பெரியாறு பென்னி குயிக் அணையைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார். ஸ்டெர்லைட் நச்சாலையை விரட்டி அடித்திருக்கிறார். இடைவிடாது போராடி இருக்கிறார் என்று தெரிந்துகொள்வார்கள். நான் புகழுக்காகவோ, விளம்பரத்திற்காகவோ இயங்கவில்லை. இந்த செந்தமிழ் மண்ணுக்காகவும், செந்தமிழ் மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். சாதி, மதம், கட்சி கடந்து நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்திற்கு 27 மாவட்டச் செயலாளர்கள் வந்திருக்கிறார்கள். கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன் வந்திருக்கிறார். நேற்று துணைப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவரான மதுரை தெற்கு தொகுதியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வந்திருக்கிறார். நாராயணராஜா வந்திருக்கிறார். நமக்கு ஒளிமயமான எதிர்காலம் இருகரம் நீட்டி வரவேற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அடியையும் நான் ஜாக்கிரதையாகத்தான் எடுத்து வைப்பேன். அண்ணாவைப் பார்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விநாயகம், உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது. உங்கள் ஆட்சியின் அதிகார நாட்கள் முடிந்துவிட்டது. உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் என்றார். அண்ணா கோபப்படவில்லையே? அவர் சொல்லி முடிப்பதற்குள் அண்ணா எழுந்து நின்று, my steps are measured என் அடிகளை கவனமாக எடுத்து வைக்கிறேன் என்று கூறினார். வேலை கொடுத்துக் கொண்டே இருந்தால்தான் ஒரு கட்சி உயிரோடு இருக்கும். கலைஞர் அப்படி செய்துகொண்டு இருந்தார். இனி நான் உங்களை சும்மா தூங்க விட மாட்டேன். பத்து நாட்களுக்கு ஒரு முறை ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருப்பேன். அதனுடைய விளைவு நல்ல விளைச்சலாக இருக்கும். தொலைக்காட்சி ஊடகங்களில் இப்பொழுது ஒரு மாதமாக பார்த்தீர்கள் என்றால், சகட்டுமேனிக்குப் பேசுகிறார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்கின்ற மேதாவிகள் நான் நடத்திய போராட்டங்களைப் பற்றி ஒரு நாளாவது ஒரு வார்த்தை கூறியிருப்பார்களா? எனது வீட்டிற்கு முதலமைச்சர் வந்ததைப் பற்றி புதிய தலைமுறையில் ஒரு சகோதரர், வைகோ ஒரேடியாகப் புகழ்கிறார் என்று கூறினார். வீட்டில் வேலை பார்க்கும் பெண் விசில் சின்னத்திற்கு வாக்களித்தார் என்று நான் கூறவே இல்லை. நான் அப்படி கூறியதாகக் கூறி, என்னை கடுமையாக தாக்கிப் பேசினார். அதிக வருடங்களுக்குப் பின்பு நமது பெயரை இப்போதாவது சொல்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மக்கள் மனதில் நாங்கள் நிற்போம். மக்களுக்கு வரும் ஆபத்தைத் தடுப்பதற்கு மறுமலர்ச்சி தி.மு.க. போராடுகிறது. அதில் ஒரு அங்கம்தான் இந்த மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாசுதேவநல்லூரில் சட்டமன்ற உறுப்பினர் தம்பி தி.மு.இராசேந்திரன் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் வைகோ மிரட்டுகிறார். நீங்கள் உடனே ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் சேர வேண்டும் என்று மிரட்டுகிறார். கட்சியில் உள்ள அத்தனை பேரும் அதிருப்தியாக இருக்கிறார்கள் என்று தமிழ் முரசு பத்திரிக்கையில் எட்டுக் காலச் செய்தியாக வெளியிட்டிருந்தார்கள். பொய் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண்டும். ராசேந்திரனையோ, செந்தில்செல்வனையோ பார்த்து ஒரு சொல் சொல்லியிருப்பேனா நான்? கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராசேந்திரனும், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வனும் சட்டமன்ற விதிகளின்படி நடந்து கொள்வார்கள். அதே நேரத்தில் இயக்கத்தில் தலைமையின் எண்ணத்திற்கு ஏற்ப பிரச்சினைகளில், திட்டங்களில் தங்கள் கருத்துக்களை எடுத்துரைப்பார்கள். நான் மிரட்டுகிறேனா? மிரட்டுகின்ற பழக்கம் எனக்கு என்றைக்கும் கிடையாது. என்னைவிட்டு விலகிச் சென்றவர்களைக்கூட நான் மிரட்டியது இல்லை. போகின்ற இடத்தில் நன்றாக இருக்கட்டும். அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க! திமுக தோழர்கள் ஓரிருவர் கோபப்படுகிறார்களே? என்று என்னிடம் கேட்டார்கள். டாக்டர் கலைஞர் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு பெரிய மாலைகள் போட்டு, மலர் தூவிவிட்டு தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் 15 நிமிடம் நேர்காணல் கொடுத்தேன். கலைஞர் செய்த தியாகங்களைக் கூறினேன். எந்த செய்தித் தாளும் வெளியிடவில்லை. தொலைக்காட்சியும் காட்டவில்லை. திமுகவினர் என் சகோதரர்கள்தான். ஏதோ உரிமையில் கோபித்துக் கொள்வார்கள் நான் அதைப் பற்றி வருத்தப்படவில்லை. அப்படித்தான் நான் கூறினேன். கூட்டணியில் இருந்து வெளியேறியது மற்றவர்களின் உரிமை. அவர்கள் எடுத்த முடிவில் நான் எந்த விமர்சனமும் செய்ய மாட்டேன். எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம். தமிழ்நாட்டு வாழ்வாதாரங்களைக் காப்பாற்றுவதற்காகப் போராடுகிறோம். வடதுருவமும், தென்துருவமும் சந்தித்ததாக, சந்திக்கப் போவதாக இங்கே இருக்கின்ற யாராவது கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? ஆனால் அரசியலில் வட துருவமும், தென் துருவமும் இணைந்து செயல்படப் போவதாக ஒரு பேச்சு நிலவியது. அதனுடைய மூலத்தை ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் சேர்வோம் என்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டதா? எனக்குத் தெரியாது. எந்தக் குற்றச்சாட்டுக்கும் வைகோ ஆளாக மாட்டான். இத்தனை போராட்டம் நடத்தியிருக்கிறோமே எந்த முதலாளியாவது என்னை நெருங்க முடிந்ததா? முடியாது. தங்கப் பழம் போன்ற பெரியவர்கள் எங்கள் மீது நல்லெண்ணம் வைத்து எங்களுக்கு உதவி செய்கிறார்கள். அந்த உதவியில் எங்கள் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். இங்கே வந்திருக்கக் கூடிய சகோதர, சகோதரிகள் 6 மணி வரை எங்கும் அசையக் கூடாது. வயதானவர்கள் இயற்கை உபாதைக்குச் சென்று வரலாம். மறுமலர்ச்சி தி.மு.க. ஒரு போராட்டம் நடத்தினால் கட்டுப்பாடு இருக்கும். ஒழுங்கு இருக்கும். நேர்த்தி இருக்கும். வெயில் அடிக்கத்தான் செய்யும். ஒரு வேளை மாலையில் மழை வருமா? என்று தெரிய வில்லை. நாடா கொன்றோ ; காடா கொன்றோ ;அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ ;எவ்வழி நல்லவர் ஆடவர்,அவ்வழி நல்லை வாழிய நிலனே.என்று அவ்வை பிராட்டி கூறினார். அப்படி நல்லூர் என்றால், காடாக இருந்தால் என்ன? மேடாக இருந்தால் என்ன? நல்லவர்கள் எங்கு வாழ்கிறார்களோ, அந்த ஊருக்கு நல்லூர் என்று பெயர் என்று அவ்வை பிராட்டி கூறினார். அப்படிப்பட்ட ஒரு நல்ஊர்தான் கடையநல்லூர். அப்படிப்பட்ட ஒரு நல்ஊர்தான் வாசுதேவநல்லூர். இசுலாமிய பெருமக்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாளாகிய இந்த ஜூன் 5 ஆம் நாளில் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்குக் கேட்டுச் செல்லாமலேயே அவர் மூன்று முறை கேரள மாநிலம் மஞ்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவர் காயிதே மில்லத் அவர்கள் ஆவார்கள். இந்தியாவிலேயே தொகுதியில் ஓட்டுக் கேட்டுப் போகாமலேயே வெற்றி பெற்றவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், மற்றொருவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அந்த காயிதே மில்லத்தின் பிறந்த நாளாகிய இந்த நன்னாளில் இசுலாமிய பெருமக்களுக்கு என்னுடைய நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழகப் பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்

சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்! | சங்கொலி