வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

எஸ்.டி.பி.ஐ கட்சியின் 18 ஆம் ஆண்டு உதய திருநாள் - வைகோ வாழ்த்து

எஸ்.டி.பி.ஐ கட்சியின் 18 ஆம் ஆண்டு உதய திருநாள் - வைகோ வாழ்த்து

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகநீதி, மதச்சார்பின்மை மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக செயல்பட்டு வரும் கட்சியின் தலைமையினருக்கும் தொண்டர்களுக்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐ கட்சி என்று அழைக்கப்படும் இந்திய சமூக நீதி ஜனநாயக கட்சி (Social Democratic Party of India) இன்று 17 ஆண்டுகளை நிறைவு செய்து 18 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது என்பதை அறிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!

'பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை' என்ற முழக்கங்களோடு சமூகநீதி, மதச்சார்பின்மை, சமூக சமத்துவம், சோசலிசம் முதலான உயரிய கொள்கைகளுக்காக நாடு தழுவிய அளவில் பாடுபடுகிற கட்சி எஸ்.டி.பி.ஐ என்பதை நாம் அறிவோம்; நாடும் அறியும்!

சிறுபான்மையினர் நலன் ஒடுக்கப்பட்டோர் நலன், ஆகியவைகளுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மனித சமுதாய நலனுக்காகவும் தொண்டாற்றி ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்பினையும் காத்து வரும் எஸ்.டி.பி.ஐ இயக்கத்திற்கு என் கனிவான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் M.K.Faizy, தமிழ் மாநில தலைவர் முகமது முபாரக் ஆகியோருக்கும், அடக்குமுறைகளுக்கும், ஆதிக்கத்திற்கும் அஞ்சாமல் மனித நேயம் காக்கும் மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும் என் பாராட்டுக்கள்!

சிறுபான்மையினர் உரிமைகளை கண்ணை இமை காப்பதுபோல் காக்கும் குறிக்கோள் கொண்ட எங்கள் மறுமலர்ச்சி திமுக சார்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அனைவருக்கும் உதய திருநாள் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 21.06.2026 அன்று விடுத்துள்ள அறிக்கை.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் 18 ஆம் ஆண்டு உதய திருநாள் - வைகோ வாழ்த்து | சங்கொலி